செய்திகள் :

``வயித்துல குழந்தை இருக்கு, விட்டுடு தம்பினு கெஞ்சினேன்’’ - நெஞ்சை உறைய செய்த கர்ப்பிணி வாக்குமூலம்

post image
வேலூர் அருகே வந்துகொண்டிருந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் 36 வயது கர்ப்பிணி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று, அவரை ஓடும் ரயிலில் இருந்தும் கீழே தள்ளிய சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியிருக்கிறது.

கை, கால் முறிந்து, தலையில் பலத்த காயத்துடன் அந்த கர்ப்பிணி மீட்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட ஹேமந்த்ராஜ் என்ற இளைஞன் ரயில்வே போலீஸாரால் கைது செய்யப்பட்டிருக்கிறான். இந்த வழக்கோடு சேர்த்து, பெண்களுக்கெதிரான மூன்று குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறான் ஹேமந்த்ராஜ்.

இந்த நிலையில், சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை கண்ணீரோடு விவரிக்கும் வீடியோ வெளியாகி, நெஞ்சை உறைய செய்திருக்கிறது.

ஹேமந்த்ராஜ்

அந்த வீடியோவில், ``நான், திருப்பூரில் நேற்று காலை 6.50 மணிக்கு டிரைன் ஏறுனேன். ஜோலார்பேட்டை வரும்போது மணி 10.45 இருக்கும். கூட பயணம் செஞ்ச மத்த லேடீஸ் ஜோலார்பேட்டையிலயே இறங்கிட்டாங்க. டிரைன் மூவ் ஆகும்போது இந்த பையன் ஏறிட்டான். `லேடீஸ் கோச் இது. நான் ஒரு ஆள் தான் இருக்கேன். நீங்க இறங்கியிருங்க’னு சொன்னேன். `டிரைன் மூவ் ஆகிடுச்சி. அடுத்து வர காட்பாடியில இறங்கிடுறேன். அது வரைக்கும் நீங்க கொஞ்சம் அட்ஜெஸ்மெண்ட் பண்ணிக்குங்க’னு அவன் சொன்னான். `சரி’னு நான் பாட்டுக்கு ஒரு ஓரமா உட்காந்துக்கிட்டு இருந்தேன். கொஞ்சம் நேரம் அவன ஆளக் காணோம். அப்புறம், பாத்ரூமில் இருந்து டிரஸ் கழட்டிட்டு என் கிட்ட வந்தான். என் டிரஸ்ஸையும் கழட்ட பாத்தான்.

`என் வயித்துல குழந்தை இருக்கு’

நான் கெஞ்சினேன். `என் வயித்துல குழந்தை இருக்கு. நான் அந்த மாதிரி பொண்ணு கிடையாது. உனக்கும் அக்கா, தங்கச்சிங்க இருப்பாங்க. தயவு செஞ்சி என்னை விட்டுடு தம்பி’னு சொன்னேன். செயின் இழுக்கிறதுக்காக சீட் மேலே ஏறுனேன். என் தலை முடியை பிடுச்சி தரதரனு இழுத்து அடிச்சான். நானும் முடிஞ்ச அளவுக்கு அவன அடிச்சேன். பாத்ரூம் உள்ள தள்ளி லாக் பண்ணிடலாம்னு நெனச்சேன். அவன் என்ன கீழே தள்ளிவிட பார்த்தான்.

பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்

`இந்த சைகோவை வெளிய விடாதீங்க’

நானும் கீழ விழாத அளவுக்கு கெட்டியா புடுச்சிட்டிருந்தேன். உதைச்சி ரைட் சைடு கையை உடைச்சிட்டான். ஒரு கை சப்போர்ட்டுலதான் பிடிச்சிட்டு இருந்தேன். அப்புறம் எட்டி உதைச்சி கீழ தள்ளிட்டான். கீழ விழுந்த பிறகு என்ன நடந்ததுனு தெரியல. தலையில இருந்து ரத்தம், சதை கொட்டுச்சி. எனக்கு மயக்கம் வந்துடுச்சி. அவன்கிட்ட அரைமணி நேரம் போராடுனேன். எனக்கு நடந்தா மாதிரி வேற எந்த பொண்ணுக்கும் நடக்கக் கூடாது. அவனுக்கு முடிஞ்ச அளவுக்கு தண்டனை வாங்கிக் கொடுங்க. `அடுத்த பொண்ணுக்கு நடக்காது’னு என்ன காரணம் இருக்கு? கண்டிப்பாக நடக்கும். இந்த சைகோவை வெளிய விடாதீங்க. மக்கள் கொடுக்கச் சொல்லும் தண்டனையைக் கொடுங்க. பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லாமல் போய்டுச்சி. டிரைனிலும் பாதுகாப்பில்லை. நடந்துச் செல்லும்போதும் பாதுகாப்பில்லை’’ என்று சொல்லி முடிக்கும்போது, கலங்கடிக்கின்றன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

`எனக்கு லீவு வேணும்..' -தர மறுத்ததால் சக ஊழியர்களைக் கத்தியால் குத்திய அரசு ஊழியர்

மேற்கு வங்கம் மாநிலத்தில், விடுப்பு அளிக்க மறுத்ததால் சக ஊழியர்கள் 4 பேரை அரசு ஊழியர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக, சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோ... மேலும் பார்க்க

'அடுத்து எனக்கு தான் ஸ்கெட்ச்' - வீடியோ காலில் கோவை சிறை கைதி பகீர் வாக்குமூலம்

கோவை மத்திய சிறையில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் இருக்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஏசுதாஸ் என்ற கைதி கடந்த ஜனவரி 27-ம் தேதி சிறை வளாகத்தில் மர்மமான முறைய... மேலும் பார்க்க

மோசடி வழக்கு: ``10-ம் தேதிக்குள் கைது செய்ய வேண்டும்" -நடிகர் சோனு சூட்க்கு எதிராக கைது வாரண்ட்!

பஞ்சாப் மாநிலம் லுதியானாவைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜேஷ் கண்ணா. இவர் லுதியானா நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ``மோஹித் சுலா என்பர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யும்படி... மேலும் பார்க்க

``தையல் போட்டால் தழும்பு வரும்'' -காயத்தில் Fevi kwik போட்டு ஒட்டிய செவிலியர்... கர்நாடக அதிர்ச்சி!

கர்நாடக மாநிலம் ஹவேரி மாவட்டத்தில் அமைந்துள்ளது ஆரம்ப சுகாதார மையம். இந்த மருத்துவமனைக்கு கடந்த ஜனவரி 14-ம் தேதி கன்னத்தில் ஆழமான காயத்துடன் ரத்தம் சொட்ட சொட்ட குருகிஷன் அன்னப்ப ஹோசாமணி என்ற 7 வயது சி... மேலும் பார்க்க

மணப்பாறை: சிறுமிக்குப் பாலியல் தொல்லை; பள்ளி தாளாளர், கணவர் உள்பட 4 பேர் கைது; என்ன நடந்தது?

திருச்சி மாவட்டம், மணப்பாறையிலுள்ள தனியார்ப் பள்ளியின் தாளாளராக இருந்து வருபவர் சுதா. இவரது கணவர் வசந்தகுமார்.நேற்று (பிப்ரவரி 6) பள்ளியில் நடைபெற்ற ஓவியப் போட்டியின் போது நான்காம் வகுப்பு படித்து வரு... மேலும் பார்க்க

`காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம்..!’ - வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தற்கொலை செய்த காதலன்

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகிலுள்ள கரடிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரின் மூத்த மகன் வசந்த். ஐடிஐ படித்து வந்த நிலையில், கல்வியை பாதியில் நிறுத்தி விட்டு கோயம்புத்தூரில் உள்ள ஒரு ஹோட்டலி... மேலும் பார்க்க