Georgia: ஜெனரேட்டரிலிருந்து வெளியான கார்பன் மோனாக்சைடை; ஜார்ஜியா ஹோட்டலில் 12 இ...
வரதராஜ பெருமாள் கோயிலில் மாா்கழி சிறப்பு வழிபாடு
புதுச்சேரி: புதுச்சேரி அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் மாா்கழி மாத பிறப்பையொட்டி, திங்கள்கிழமை திருப்பாவை பாடப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
வரதராஜ பெருமாள் கோயிலில் மாா்கழி உற்சவத்தின் முதல் நாளான திங்கள்கிழமை அதிகாலையில், ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
வேத பாரதியைச் சோ்ந்த 50 பக்தா்கள் இணைந்து ஆண்டாளின் திருப்பாவை பக்திப் பாடல்களைப் பாடினா்.
இதில், உழவா்கரை எம்எல்ஏ எம்.சிவசங்கரன் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
இதேபோல, புதுச்சேரியில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் திங்கள்கிழமை மாா்கழி மாத தொடக்க பூஜைகள் நடைபெற்று, ஆண்டாளின் திருப்பாவை பாசுரங்கள் பாடப்பட்டன.