"நாடகக்கலை என்பது நம்மை அழைத்துக்கொண்டே இருக்கும் பாசிட்டிவ் மோகினி" - 'மணல்மகுட...
வரி ஏய்ப்பு புகார்: துல்கர் சல்மானின் 2 கார்கள் பறிமுதல்!
நடிகர்கள் மம்மூட்டி, துல்கர் சல்மான் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் இன்று(செப்.23) காலை சோதனை நடத்திய நிலையில், துல்கர் சல்மானின் 2 கார்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆபரேஷன் நும்கூர்
வரி செலுத்தாமல் உயர் ரக வாகனங்களை இறக்குமதி செய்யும் மோசடிகளை கண்டறிய நாடு முழுவதும் ‘ஆபரேஷன் நம்கூர்’ என்ற பெயரில் பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கேரள மற்றும் லட்சத்தீவு சுங்க ஆணையரகத்தின் தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையில், கேரள மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 30 இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பணம்பிள்ளி நகரில் உள்ள துல்கர் சல்மான், தேவாராவில் உள்ள பிருத்விராஜ் மற்றும் எலம்குளத்தில் உள்ள மம்மூட்டி ஆகியோரின் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
துல்கர் வீட்டில் சோதனை
மலையாளம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் மிகவும் பிரபல நடிகரான துல்கர் சல்மான் நடிப்பு மட்டுமல்லாமல், தயாரிப்பிலும் அசத்தி வருகிறார். இந்த நிலையில், இன்று(செப்.23) காலை துல்கர் சல்மான், பிரித்விராஜ் மற்றும் மம்மூட்டி ஆகியோரின் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்ட சம்பவம் மலையாளத் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கார் பறிமுதல்
இந்தச் சோதனையில், சட்டவிரோதமாக பூடானில் இருந்து துல்கர் சல்மான், பிரித்விராஜ் உள்ளிட்டோர் ராணுவத்தில் பயன்படுத்திய கார்களை வரி ஏய்ப்பு செய்து வாங்கியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கொச்சியிலுள்ள இருவரது வீட்டிலும் கார் வாங்கிய ஆவணங்களையும், வரிதொடர்பான விஷயங்களையும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்தனர்.
பூடான் நாட்டின் வழியாக கார் இறக்குமதி செய்தததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து துல்கர் சல்மானின் பெயரில் உள்ள லேண்ட் ரோவர் டிஃபென்டர் கார் உள்பட இரண்டு கார்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், கார் வாங்கியதற்கான முறையான ஆவணங்களை சமர்ப்பிக்கவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.