செய்திகள் :

வரி விதிப்பால் 7 போர்களை நிறுத்தியுள்ளேன்: டிரம்ப்

post image

வரி விதிப்பைப் பயன்படுத்தி இதுவரை 7 போர்களை நிறுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

சீனாவின் டிக் - டாக் உடன் அமெரிக்காவுக்கு ஒரு ஒப்பந்தம் உள்ளது. சீனாவுடன் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்வதற்காக அதிபர் ஸி ஜின்பிங் உடன் வெள்ளிக்கிழமை பேசவுள்ளேன்.

எங்கள் இரு நாடுகளுக்கும் மிகச்சிறந்த வணிக ஒப்பந்தமாக இது இருக்கும். கடந்த காலங்களின் ஒப்பந்தங்களை விட வித்தியாசமானதாகவே அமையும். எங்களிடம் மிகப்பெரிய நிறுவனங்கள் உள்ளன.

நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் வரி விவகாரம் முடிவுக்கு வரும். உலகின் மற்ற நாடுகளைக் காட்டிலும் செல்வந்த நாடாக அமெரிக்கா இருக்கும். வரி விதிப்பில் பேரம் பேசும் உரிமை அமெரிக்காவுக்கு உண்டு. வரி விதிப்பின் மூலம் 7 போர்களை நிறுத்தியுள்ளேன். அதில் 4 நாடுகளுடன் அமெரிக்கா வணிகம் செய்து வருகிறது.

உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கியும் அமெரிக்காவின் ஒப்பந்தத்திற்கு இணங்கியுள்ளார். ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை ஐரோப்பிய நாடுகள் நிறுத்த வேண்டும் என டிரம்ப் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | காஸாவில் பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளை நினைத்துப்பாருங்கள்! -இஸ்ரேலிடம் ஐ.நா. மனித உரிமைகள் தலைவர்

US President Donald Trump has said that he has stopped 7 wars so far using taxes

ரஷிய கடலடி எரிவாயு குழாய் தகா்ப்பு வழக்கு: ஜொ்மனிக்கு நாடுகடத்தப்படும் உக்ரைனியா்

ரஷியாவில் இருந்து ஜொ்மனிக்கு எரிவாயு வழங்கும் நாா்த் ஸ்ட்ரீம் கடலடி குழாய்களை வெடிவைத்து தகா்த்ததாக சந்தேகிக்கப்பட்டு கடந்த மாதம் கைது செய்யப்பட்ட, உக்ரைன் நாட்டைச் சோ்ந்த சொ்ஹீ குஸ்னியெட்ஸோவை ஜொ்... மேலும் பார்க்க

காஸாவில் பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளை நினைத்துப்பாருங்கள்! -இஸ்ரேலிடம் ஐ.நா. மனித உரிமைகள் தலைவர்

“காஸா மீதான தீங்கிழைக்கக்கூடிய அழிவு நடவடிக்கைகளை இஸ்ரேல் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமைப் பதவி வகிக்கும் வோல்கர் டர்க் கேட்டுக்கொண்டுள்ளார்.ஜெனீவாவில் செய்தியாளர... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் மசூத் அஸாரின் குடும்பத்தினர் கொல்லப்பட்டது உண்மைதான்! - ஜெய்ஷ்-இ-முகமது

இந்திய விமானப்படையின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவா் மசூத் அஸாரின் குடும்பத்தினர் இறந்ததாக அந்த அமைப்பு கூறியுள்ளது. ஜம்மு- காஷ்மீரில் ஏப். 22ல் பஹல்காம் தாக்க... மேலும் பார்க்க

டொனால்ட் டிரம்ப்புடன் பாக். பிரதமர், ராணுவ தலைமைத் தளபதி விரைவில் சந்திப்பு!

பாகிஸ்தான் பிரதமரும் ராணுவ தளபதியும் இம்மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பைச் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளனர். இம்மாதம் 25-ஆம் தேதி இந்தச் சந்திப்பு நடைபெற உள்ளதாக இருநாட்டுத் தலைமைக்கும் நெருக... மேலும் பார்க்க

இந்தியா மீதான வரி புரிந்துகொள்ளக்கூடியதே; ஆனால் ரஷியா மீது...! - ஸெலென்ஸ்கி கருத்து

இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு புரிந்துகொள்ளக்கூடியது என்றும் ரஷியாவிற்கு எதிராக அமெரிக்கா கடுமையான வரி விதிக்க வேண்டும் என்றும் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். ஊடகம் ஒன்றிற்க... மேலும் பார்க்க

‘அரபு நேட்டோ கூட்டமைப்பு' உருவாகிறதாம்: முஸ்லிம் நாடுகள் ஒருமித்த முடிவு!

‘அரபு நேட்டோ கூட்டமைப்பு' உருவாக்கப்பட வேண்டுமென முஸ்லிம் நாடுகள் இணைந்து ஒருமித்த முடிவுக்கு வந்துள்ளன. கத்தார் தலைநகர் தோஹாவில் திங்கள்கிழமை(செப். 15) அரபு லீக் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பை ... மேலும் பார்க்க