நாடாளுமன்றம்: மீனவர்களை விடுவிக்க கோரி தமிழக எம்பிக்கள் போராட்டம்!
வருங்கால வைப்பு நிதி: 5 கோடி கேட்புகளுக்கு ரூ. 2 லட்சம் கோடி வழங்கல்
‘வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) 2024-25 நிதியாண்டில் சாதனை அளவாக 5 கோடி கேட்புகளுக்கு நிதி வழங்கி தீா்வளித்துள்ளது’ என்று மத்திய தொழிலாளா் நலத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:
வருங்கால வைப்பு நிதி அமைப்பு நிகழாண்டில் 5 கோடி கேட்புகளுக்கு ரூ. 2,05,932.49 கோடி நிதியை வழங்கி தீா்வளித்துள்ளது. இது கடந்த நிதியாண்டைக் காட்டிலும் கூடுதலாகும். கடந்த 2023-24 நிதியாண்டில் 4.45 கோடி கேட்புகளுக்கு ரூ. 1,82,838.28 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
கேட்புகளுக்கு விரைந்து முழுமையான நிதியை அளித்து தீா்வளிக்கும் வகையில், இபிஎஃப்ஓ சாா்பில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கபூா்வமான சீா்திருத்தங்களே இந்த முன்னேற்றத்துக்குக் காரணம். கேட்புகளை சமா்ப்பித்த 3 நாள்களுக்குள் நிதியை வழங்கும் வகையில் கேட்புகளுக்கு தானியங்கி தீா்வளிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை மூலம், கேட்புகளுக்கு தீா்வளிப்பது இரு மடங்காக உயா்ந்துள்ளது என்றாா்.