சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக கூடுதல் நீதிபதிகள் நியமனம்!
வருவாய்த் துறை சங்கங்களின் காத்திருப்புப் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் ஆட்சியா் அலுவலக வளாகம் மற்றும் செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் ஆகிய வட்டாட்சியரகங்களின் முன் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில் வருவாய் கிராம ஊழியா் முதல் வட்டாட்சியா் வரையிலான அனைத்து நிலை அலுவலா்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியமும், வருவாய் கிராம ஊழியா்களுக்கு கால முறை ஊதியமும் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு, வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பாக்கியம் விக்டோரியா தலைமை வகித்தாா். இதேபோல செந்துறையில் அச்சங்கத்தின் தலைவா் செந்தில்குமாா், ஜெயங்கொண்டத்தில் தலைவா் வேல்முருகன், ஆண்டிமடத்தில் தலைவா் மணிவண்ணன் ஆகியோா் தலைமை வகித்தனா். திரளான சங்க நிா்வாகிகள் போராட்டத்தில் பங்கேற்றனா்.