தமிழகத்தில் மூளை தின்னும் அமீபா பரவல் இல்லை: மா. சுப்பிரமணியன்
வலுவான ஜிடிபி தரவுகளால் சென்செக்ஸ், நிஃப்டி உயர்ந்து நிறைவு!
மும்பை: தொடர்ந்து மூன்று நாட்கள் இழப்புகள் சந்தித்த நிலையில், வலுவான மேக்ரோ தரவுகளுக்குப் பிறகு, சென்செக்ஸில் இன்று ஐடி, ஆட்டோ மற்றும் வங்கி துறை பங்குகள் உயர்ந்து முடிந்தன.
காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு ஏற்றத்துடன் தொடங்கியது. பிறகு 597.19 புள்ளிகள் உயர்ந்து 80,406.84 என்ற உச்சத்தை எட்டியது. முடிவில் 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 554.84 புள்ளிகள் உயர்ந்து 80,364.49 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 198.20 புள்ளிகள் உயர்ந்து 24,625.05 புள்ளிகளாக நிலைபெற்றது.
சென்செக்ஸில் மஹிந்திரா & மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், டிரென்ட், எடர்னல், ஆசிய பெயிண்ட்ஸ் மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவை உயர்ந்து முடிந்த நிலையில் சன் பார்மா, ஐடிசி, இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் டைட்டன் ஆகியவை சரிந்து முடிவடைந்தன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த வரிகள் தற்போது எதிர்காலத்தை மங்கச் செய்த நிலையில், ஜவுளி உள்ளிட்ட முக்கிய ஏற்றுமதிகளை அச்சுறுத்துவதற்கு முன்பு, ஏப்ரல் முதல் ஜூன் வரையான மாதங்களில் இந்தியாவின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட 7.8 சதவிகிதமாக வளர்ந்துள்ளது.
இந்தியாவின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, கணிப்புகளை விட அதிகமாக, 7.8% ஆக இருப்பது, உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் பொருளாதாரத்தின் மீள்தன்மை குறித்த முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது.
வரவிருக்கும் ஜிஎஸ்டி கூட்டத்தில் எதிர்பார்ப்புகளை தொடர்ந்து முதலீட்டாளர்களின் உணர்வையும் இது வெகுவாக வலுப்படுத்தி உள்ளது. இந்த தொடர் நம்பிக்கை குறிப்பாக ஆட்டோ மற்றும் நுகர்வோர் துறைகளுக்கு குறிப்பாக பயனளிக்கும்.
ஆசிய சந்தைகளில் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை உயர்ந்த நிலையில், தென் கொரியாவின் கோஸ்பி மற்றும் ஜப்பானின் நிக்கி 225 குறியீடு சரிவுடன் முடிவடைந்தன.
ஐரோப்பாவில் சந்தைகள் பெரும்பாலும் உயர்ந்து வர்த்தகமானது. அமெரிக்க சந்தைகள் கடந்த வாரம் (வெள்ளிக்கிழமை) சரிவுடன் முடிவடைந்தன.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.92 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 68.10 அமெரிக்க டாலராக உள்ளது.
கடந்த வராம் (வெள்ளிக்கிழமை) அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.8,312.66 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்த நிலையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.11,487.64 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
இதையும் படிக்க: அமெரிக்க வரி எதிரொலி: ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு சரிவு!