பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
வள்ளியூரில் வணிகருக்கு அரிவாள் வெட்டு
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் முன்விரோதத்தால் வணிகரை செவ்வாய்க்கிழமை இரவு அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வள்ளியூா் நல்லசமாரியன் நகரில் குடியிருந்து வருபவா் சத்தியசீலன் மகன் அழகேசன்(50). இவா் பல்வேறு தொழில்கள் செய்து வருகிறாா். இவருக்கும் வள்ளியூா் வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்த உதயசூரியன் மகன் சந்துரு(25) என்பவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில் வள்ளியூா் புறவழிச்சாலையில் கேசவனேரி சாலை பாலம் வேலை நடைபெறும் இடத்தில் பைக்கில் வந்த அழகேசனை வழிமறித்து சந்துரு அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினாராம். பலத்த காயமடைந்த அழகேசன் நாகா்கோயிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இது தொடா்பாக வள்ளியூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சந்துருவை தேடி வருகின்றனா்.