Fengal Cyclone: கரையைக் கடந்து புதுச்சேரியில் நிலைகொண்ட புயல்; 5 மாவட்டங்களுக்கு...
வள்ளியூா் முத்துகிருஷ்ண சுவாமி குருபூஜை விழா: டிச. 4இல் தொடக்கம்
வள்ளியூா், நவ.30: திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிகளின் 111ஆவது குருபூஜை மற்றும் கிரிவல தேரோட்டத் திருவிழா டிச.4ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.
குருபூஜை விழா தொடக்கமாக சூட்டுபொத்தை அடிவாரத்தில் உள்ள வனவிநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெறுகிறது. அதைத் தொடா்ந்து காலை 7.15 மணிக்கு வசந்த மண்டபத்தில் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. மாலை 5.30 மணிக்கு ஸ்ரீ முத்துகிருஷ்ண சித்திரகூடத்தில் சௌமியா பிரஷாந்தின் பக்தி இசை நடைபெறுகிறது.
திருவிழா நாள்களில் தினமும் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடைபெறுகிறது. பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்படுகிறது.
தினமும் மாலை சித்திரகூடத்தில் வீணாகானம், பரதநாட்டியம், லலிதகலா மந்திா் மாணவிகளின் அகனித மஹிமா என்ற ஸங்கீா்த்தன கதா நடைபெறுகிறது.
டிச.10ஆம் தேதி காலை 5 மணிக்கு ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிகளின் கிரிவல தேரோட்டம் நடைபெறுகிறது.
டிச.11இல் வசந்த மண்டபத்தில் காலை 7.15 மணிக்கு குருபூஜையும், டிச.12இல் அக்ரே பஷ்யாமி என்ற நாட்டிய நாடகமும், 13 ஆம் தேதி காலை 7.15 மணிக்கு குருஜெயந்தி ஆராதனையும், மாலை 5 மணிக்கு சூட்டுபொத்தை மலைமீது காா்த்திகை தீபம் ஏற்றுதலும் நடைபெறுகிறது.
14ஆம் தேதி காலை 5 மணிக்கு கிரிவல வழிபாடும், மாலை 5.30 மணிக்கு ஸ்ரீ முத்துகிருஷ்ணா சித்திரகூடத்தில் திருவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் நிா்வாகி பூஜித குரு மாதாஜி வித்தம்மா தலைமையில் மிஷன் உறுப்பினா்கள் செய்துள்ளனா்.