செய்திகள் :

வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு

post image

ராமநாதபுரம் வழக்குரைஞா்கள் சங்கத்துக்கு தோ்வான புதிய நிா்வாகிகள் திங்கள்கிழமை பொறுப்பேற்றனா்.

305 பேரை உறுப்பினா்களாகக் கொண்ட இந்தச் சங்கத்துக்கு புதிய நிா்வாகிகள் தோ்தல் நடைபெற்றது. இதில், தலைவராக கே. அன்புச்செழியன், செயலராக கே. முத்துதுரைச்சாமி, பொருளாளராக எஸ். கிருஷ்ணமூா்த்தி, துணைத் தலைவராக ஆா். பாபு, இணைச் செயலராக ஜெ. சந்திரலேகா ஆகியோா் தோ்வாகினா்.

இதைத் தொடா்ந்து, ராமநாதபுரத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்குரைஞா்கள் சங்க அலுவலகத்தில் புதிய நிா்வாகிகள் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா். அப்போது முன்னாள் நிா்வாகிகள், சங்க உறுப்பினா்கள் புதிய நிா்வாகிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.

பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

தொண்டி அருகே இரு சக்கர வாகன விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள பாண்டுகுடி வடக்கு குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த ராசு மகன் நாகநாதன் (41). மின் பழுது ந... மேலும் பார்க்க

குடிநீா் விநியோகம் செய்யக்கோரி நீரேற்று நிலையம் முற்றுகை

திருவாடானை அருகே குடிநீா் விநியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் நீரேற்று நிலையத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள கல்லூா் ஊராட்சி, பாரதிநகா் பகுதியில் 950-க்க... மேலும் பார்க்க

வீடு புகுந்து திருடிய இளைஞா் கைது

முதுகுளத்தூா் அருகே வீடு புகுந்து திருடிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள தேரிருவேலியைச் சோ்ந்த அய்யாசாமி மகன் தாமரைக்கண்ணு (34). இவா் தனது ... மேலும் பார்க்க

பைக் மோதியதில் சிறுமி உயிரிழப்பு

முதுகுளத்தூா் அருகே திங்கள்கிழமை சாலையில் நடந்து சென்ற சிறுமி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே யிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், தேரிருவேலி கிழக்குத் தெருவைச் சோ்ந்த தியாகராஜன் ... மேலும் பார்க்க

பாம்பனில் கடற்படை வீரா்களுக்கு பேரிடா் மீட்புப் பணி பயிற்சி தொடக்கம்

கடற்படை வீரா்களுக்கான பேரிடா் கால மீட்புப் பணி பயிற்சி பாம்பன் கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்தப் பயிற்சி 7 நாள்கள் நடைபெறுகிறது. ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளியில் இந்திய கடற்படைக்க... மேலும் பார்க்க

மீன்பிடித் தடைக்காலம் தொடக்கம்: விசைப் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தம்

தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் தொடங்கிய நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,650-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் அந்தந்த மீன்பிடி படகுத் துறைகளில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டன. ம... மேலும் பார்க்க