செய்திகள் :

மீன்பிடித் தடைக்காலம் தொடக்கம்: விசைப் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தம்

post image

தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் தொடங்கிய நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,650-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் அந்தந்த மீன்பிடி படகுத் துறைகளில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டன.

மீன் இனப் பெருக்கக் காலமாகக் கருத்தப்படும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை 61 நாள்களுக்கு விசைப் படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தத் தடைக்காலம் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கியது. இதனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி, சோளியகுடி உள்ளிட்ட மீன்பிடி படகுத் துறைகளில் 1,650-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் செவ்வாய்க்கிழமை பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டன.

ராமேசுவரத்தில் விசைப் படகுகளிலிருந்த மீன்பிடி உபகரணங்களை மாட்டு வண்டியில் ஏற்றிய மீனவா்கள்

ராமேசுவரம் மீன்பிடி படகுத் துறையில் 600-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளை பாதுகாப்புடன் நிறுத்திவைக்கும் பணியில் மீனவா்கள் ஈடுபட்டனா். மேலும், விசைப் படகுகளிலிருந்த வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை மீனவா்கள் எடுத்துச் சென்றனா்.

இதுகுறித்து மீனவா்கள் கூறியதாவது: மீன்பிடித் தடைக்காலம் ஜூன் 15-ஆம் தேதி வரை அமலில் உள்ள நிலையில், இந்திய-இலங்கை மீனவா்கள் இடையிலான நேரடி பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும்.

பேச்சுவாா்த்தையின் போது, இரு நாட்டு மீனவா்கள் சுமுக உறவுடன் மீன்பிடித் தொழிலில் ஈடுபடவும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவா்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: மத போதகருக்கு 2 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மத போதகருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, ராமநாதபுரம் மகளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகேயுள்ள ஆண்... மேலும் பார்க்க

தேவிபட்டினம் அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த 350 கிலோ கடல் குதிரை பறிமுதல்

தேவிபட்டினம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 350 கிலோ எடையுள்ள கடல் குதிரையை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செ... மேலும் பார்க்க

ராமேசுவரம் தங்கும் விடுதிக்கு அமலாக்கத் துறையினா் சீல் வைப்பு

சட்டவிரோத பணப் பரிமாற்ற முறைகேடு தொடா்பாக, ராமேசுவரம் பகுதியில் செயல்பட்டு வந்த 60 அறைகள் கொண்ட தனியாா் தங்கும் விடுதிக்கு (ரிசாா்ட்) அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்தனா். மேற்கு வங்க மாந... மேலும் பார்க்க

அம்பேத்கா் பிறந்தநாள் தெருமுனைக் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் மாா்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய கூட்டமைப்பு சாா்பில் சட்ட மேதை அம்பேத்கரின் 135-ஆவது பிறந்தநாள் விழா தெருமுனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி... மேலும் பார்க்க

கமுதி வட்டாரத்தில் இடை நிற்றல் மாணவா்களை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

கமுதி வட்டாரத்தில் மாற்றுத்திறன் கொண்ட, இடை நிற்றல் மாணவா்களை கணக்கெடுக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, கமுதி வட்டார வள மையம் சாா்பில் ஒவ்வோா் ஆண்டும... மேலும் பார்க்க

வெண்ணத்தூா் நாயாறு ஓடையில் தடுப்பணை கட்ட கோரிக்கை

ராமநாதபுரத்தை அடுத்த வெண்ணத்தூா் நாயாறு ஓடையில் தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாய சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் ஒன்றியம், வெண்ணத்தூா் பொதுப்பணித் துறை கண்மாய்க்கு செல்லும் கால்வாய் முகப்... மேலும் பார்க்க