வழக்குரைஞா்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
திருச்சியில் வழக்குரைஞா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய அரசின் சட்டத்தை திரும்பபெற வலியுறுத்துவது, வழக்குரைஞா்கள் சேம நல நிதியை ரூ.10 லட்சத்தில் இருந்து 25 லட்சமாக உயா்த்தி வழங்க வலியுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் வழக்குரைஞா்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட நீதிமன்ற வளாகத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பணியாற்றும் வழக்குரைஞா்களும் வியாழக்கிழமை, நீதிமன்ற பணிகளிலிருந்து விலகியிருந்தனா். இதனால் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் பாதிக்கப்பட்டன. பணிகளில் தாமதமும் ஏற்பட்டது.