மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டம் பற்றி தமிழக அரசு சொன்னது என்ன? தெற்கு ரயில்வே
வழித்துணையே! டிராகன் திரைப்படத்தின் இரண்டாவது பாடல்!
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகிவரும் டிராகன் திரைப்படத்தின் புதிய பாடலைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான இந்த பாடலின் ”ஆஸ்கர் புரோமோ” விடியோ நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், வழித்துணையே எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த இரண்டாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
லிரிக்கல் விடியோவாக வெளியாகவுள்ள இந்தப் பாடலுக்கு லியான் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். விக்னேஷ் சிவன் மற்றும் கே.ஓ.சேஷன் ஆகியோர் வரிகளை அமைத்துள்ளனர்.
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் கல்பாத்தி நிறுவனம் தயாரிப்பில் இந்தத் திரைப்படம் உருவாகிவருகிறது. இந்தத் திரைப்படத்தில் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், கே. எஸ். ரவிக்குமார் ஆகிய இயக்குநர்கள் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே பிரதீப் ரங்கனாதனின் லவ் டுடே, அஷ்வத் மாரிமுத்துவின் ஓ மை கடவுளே ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் இருவரின் காம்போவில் உருவாகிவரும் இந்தத் திரைப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு கிடைத்துள்ளது.
ஏற்கனவே இந்தத் திரைப்படத்தின் முதல் பாடலான அனிருத் பாடிய ரைஸ் ஆஃப் தி டிராகன் பாடலில் கௌதம் வாசுதேவ் மேனன் நடனமாடியது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்போது காதல் பாடலாக இது வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகராகவும் இயக்குநராகவும் வலம் வரும் பிரதீப் ரங்கநாதன் தற்போது டிராகன் மற்றும் எல்ஐகே திரைப்படங்களில் நடித்துவருகிறார்.