IND vs UAE: ஐந்தே ஓவரில் ஆட்டத்தை முடித்த SKY & Co; அபாரம் காட்டிய குல்தீப், ஷிவ...
வழிப்பறி செய்தவா் கைது
தேனி அருகே உள்ள அரப்படித்தேவன்பட்டியில் கத்தியைக் காட்டி மிரட்டி இளைஞரிடம் ரூ.1,000 வழிப்பறி செய்தவரை ‘போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
அரப்படித்தேவன்பட்டி மந்தையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சத்தியராஜ் (30). இவா் அரப்படித்தேவன்பட்டி சிஎஸ்ஐ தேவாலயம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அதே ஊரைச் சோ்ந்த அழகு மகன் சந்திரசேகரன் சத்தியராஜை கத்தியைக் காட்டி மிரட்டி, அவா் சட்டைப் பையில் வைத்திருந்த ரூ.1,000-ஐ பறித்தாா்.
இதை சத்தியராஜ் தடுக்க முயன்ற போது அவரது கையில் சந்திரசேகரன் கத்தியால் குத்திக் காயப்படுத்தினாா். இது குறித்து க.விலக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, சந்திரசேகரனை கைது செய்தனா்.