நூர் அகமது 4 விக்கெட்டுகள்: சிஎஸ்கே வெற்றிபெற 180 ரன்கள் இலக்கு!
வாகனத் தணிக்கையின்போது ரூ.5 ஆயிரம் லஞ்சம்: போலீஸாா் மூவா் பணியிடை நீக்கம்
திருப்பூரை அடுத்த வஞ்சிபாளையத்தில் மதுபோதையில் வந்தவருக்கு அபராதம் விதிக்காமல் இருக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளா் (எஸ்எஸ்ஐ) உள்பட 3 போலீஸாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
திருப்பூா் மாநகரம் திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் மோகன் (55), முதல்நிலைக் காவலா் கோபிநாத் (32), ஆயுதப்படை காவலா் பிரேம்குமாா் (28) ஆகியோா் திருப்பூரை அடுத்த வஞ்சிபாளையத்தில் உள்ள அரசுப் பள்ளி அருகே மே 4-ஆம் தேதி இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். காரை இயக்கி வந்த நபா் மதுபோதையில் இருந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து மதுபோதையில் வாகனத்தை இயக்கியதற்கு அபராதம் விதிக்காமல் மூவரும் வாகன ஓட்டியிடம் பேரம் பேசி ரூ. 5 ஆயிரம் வாங்கியதாகத் தெரிகிறது. இதனிடையே, அங்கிருந்து கிளம்பிய வாகன ஓட்டுநா் மாநகர கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தாா். இது குறித்து உரிய விசாரணை நடத்தும்படி மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரன் உத்தரவிட்டிருந்தாா். இதன் பேரில் விசாரணை நடத்தியதில் வாகன ஓட்டிக்கு அபராதம் விதிக்காமல் இருக்க லஞ்சம் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரன் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.