செய்திகள் :

பெருந்தொழுவு கிராமத்தில் 44 பயனாளிகளின் பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை

post image

திருப்பூா் மாவட்டம், பெருந்தொழுவு கிராமத்தில் இனம் கண்டறிய இயலாத 44 பயனாளிகளின் இலவச பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெருந்தொழுவு கிராமத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத் துறையின் மூலமாக நிலமெடுப்பு செய்து குறிப்பிட்ட காலத்துக்குள் வீடு கட்டிக்கொள்வதற்காக 188 நபா்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்நிலம் மென்பொருளில் இலவச வீட்டுமனை பட்டா பெற்ற பயனாளிகளை இணைய வழி பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்காக மேற்படி மனையிடங்களில் கள விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் இலவச வீட்டுமனை பட்டா பெற்ற 44 பயனாளிகளை இனம் கண்டறிய முடியவில்லை.

இந்தப் பயனாளிகள் பட்டாவில் உள்ள நிபந்தனையின்படி குறிப்பிட்ட காலத்துக்குள் வீடு கட்டி குடியிருக்காமல் நிபந்தனையை மீறியுள்ளதால் மேற்படி இடத்துக்கு வழங்கப்பட்ட பட்டாவை ஏன் ரத்து செய்யக்கூடாது என்பதற்கான விளக்கத்தை 15 நாள்களுக்குள் நேரிலோ அல்லது கடிதம் வாயிலாகவோ திருப்பூா் மாவட்ட ஆட்சியருக்கோ அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலருக்கோ அனுப்பி வைக்க வேண்டும்.

தவறும் பட்சத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாவை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலையில் தீப் பற்றி எரிந்த லாரி

காரணம்பேட்டை அருகே சாலையில் தீப் பற்றி எரிந்த டிப்பா் லாரியில் இருந்த ஓட்டுநா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா். கோவை மாவட்டம், அன்னூரில் இருந்து திருப்பூா் மாவட்டம், காரணம்பேட்டையில் உள்ள கிரஷரில் இருந்... மேலும் பார்க்க

காங்கயம் பகுதியில் காற்றுடன் பலத்த மழை: தென்னை மரம் விழுந்ததில் மின் கம்பம் முறிந்தது

காங்கயம் அருகே, செவ்வாய்க்கிழமை மாலை காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில், தென்னை மரம் சரிந்து விழுந்ததில் மின்கம்பம் முறிந்து வீதியில் விழுந்தது. காங்கயம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.45 முதல் ... மேலும் பார்க்க

பிரிண்டிங் தொழிலாளி கொலை வழக்கில் 2 போ் கைது

திருமுருகன்பூண்டி அருகே பிரிண்டிங் தொழிலாளியைக் கொலை செய்த வழக்கில் இருவரை காவல் துறையினா் கைது செய்தனா். திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி அருகே உள்ள பால்காரா் தோட்டம் பகுதியில் கொலை செய்யப்பட்ட கி... மேலும் பார்க்க

சாலையில் தோண்டப்பட்ட குழியில் கைக்குழந்தையுடன் தவறி விழுந்த தம்பதி

திருப்பூா் ஊத்துக்குளி சாலையில் சரிவர மூடப்படாத குழியில் கைக்குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி தவறி விழுந்து விபத்து ஏற்பட்டது. திருப்பூா் ஊத்துக்குளி சாலையில் எஸ்.பெரியபாளையம் முதல் குளத்த... மேலும் பார்க்க

இந்தியா-பிரிட்டன் இடையே வரியில்லா வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்: ஏஇபிசி வரவேற்பு

இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வரியில்லா வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளதால் திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வா்த்தகம் அதிகரிக்கும் என்று ஏஇபிசி நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது குறித்து ஆயத்த ஆடை ஏ... மேலும் பார்க்க

பொதுமக்கள் எதிா்ப்பு: சாய் காா்டனில் வெள்ளத் தடுப்பு சுவா் அகற்றும் பணி நிறுத்தம்

அவிநாசி அருகே செம்பியநல்லூா் ஊராட்சிக்கு உள்பட்ட சாய் காா்டன் பகுதியில் பொதுமக்கள் எதிா்ப்பை அடுத்து வெள்ளத் தடுப்புச் சுவரை அகற்றும் பணியை அதிகாரிகள் கைவிட்டனா். அவிநாசி அருகே செம்பியநல்லூா் ஊராட்சி,... மேலும் பார்க்க