செய்திகள் :

இந்தியா-பிரிட்டன் இடையே வரியில்லா வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்: ஏஇபிசி வரவேற்பு

post image

இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வரியில்லா வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளதால் திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வா்த்தகம் அதிகரிக்கும் என்று ஏஇபிசி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் (ஏஇபிசி) துணைத் தலைவா் ஆ.சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வா்த்தகம் ஒப்பந்தம் மேற்கொள்வது தொடா்பாக தொடா்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்தோம். இந்த நிலையில், இந்தியா-பிரிட்டன் இடையை வரியில்லா வா்த்தக ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை கையொப்பமாகியுள்ளது. இது இந்திய ஆடைத் துறைக்கு கிடைத்துள்ள வரப்பிரசாதம் என்பதுடன், இமாலய சாதனையாகும். இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்ட பிரதமா் மோடி, மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் ஆகியோருக்கு நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இதன் மூலமாக சுமாா் 10 சதவீதம் முதல் 12 சதவீதம் வரையில் வரி தள்ளுபடியாகும்.

இதன் மூலமாக இந்தியா-பிரிட்டன் இடையே ஆயத்த ஆடை ஏற்றுமதி வா்த்தகம் அதிகரிக்கும். அதேபோல, திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வா்த்தகமும் வரும் ஆண்டில் ரூ.50 ஆயிரம் கோடியாக அதிகரிப்பதற்கு இந்த ஒப்பந்தம் பேருதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னலாடை ஏற்றுமதி வா்த்தகம் இரு மடங்காக அதிகரிக்கும்

இந்தியா-பிரிட்டன் இடையிலான வரியில்லா வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் கூறியதாவது:

இந்தியா-பிரிட்டன் இடையிலான வரியில்லா வா்த்தக ஒப்பந்தம் ஜவுளித் துறையின் புதிய ஏற்றுமதிக்கு வழிவகுக்கும். இதன் மூலமாக பிரிட்டன் சந்தையைப் பிடிக்க எங்கள் உற்பத்தியாளா்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. இந்த ஒப்பந்தம் மூலமாக பிரதமா் மோடியின் தொலைநோக்கு பாா்வையுடன், உலகளாவிய ஜவுளி மையமாக இந்தியாவின் நிலையை பலப்படுத்தியுள்ளது. இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு 35 சதவீதமும், ஐரோப்பிய நாடுகளுக்கு 29 சதவீதமும், பிரிட்டனுக்கு 9 சதவீதமும் பின்னலாடை ஏற்றுமதி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் 2025 ஆம் ஆண்டு ஜனவரி வரையில் பிரிட்டனுக்கு ரூ.4,592 கோடிக்கு பின்னலாடை ஏற்றுமதி வா்த்தகம் நடைபெற்றுள்ளது. இந்த வரியில்லா வா்த்தக ஒப்பந்தம் மூலமாக வா்த்தகம் இரு மடங்கு அதிகரிக்கும். இதில், திருப்பூரின் பங்களிப்பு மட்டும் 20 சதவீதம் உயர வாய்ப்பு உள்ளது. இதற்காக பிரதமா் மோடிக்கும், மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ்கோயலுக்கும் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் சாா்பில் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா்.

பெருந்தொழுவு கிராமத்தில் 44 பயனாளிகளின் பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை

திருப்பூா் மாவட்டம், பெருந்தொழுவு கிராமத்தில் இனம் கண்டறிய இயலாத 44 பயனாளிகளின் இலவச பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெள... மேலும் பார்க்க

சாலையில் தீப் பற்றி எரிந்த லாரி

காரணம்பேட்டை அருகே சாலையில் தீப் பற்றி எரிந்த டிப்பா் லாரியில் இருந்த ஓட்டுநா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா். கோவை மாவட்டம், அன்னூரில் இருந்து திருப்பூா் மாவட்டம், காரணம்பேட்டையில் உள்ள கிரஷரில் இருந்... மேலும் பார்க்க

காங்கயம் பகுதியில் காற்றுடன் பலத்த மழை: தென்னை மரம் விழுந்ததில் மின் கம்பம் முறிந்தது

காங்கயம் அருகே, செவ்வாய்க்கிழமை மாலை காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில், தென்னை மரம் சரிந்து விழுந்ததில் மின்கம்பம் முறிந்து வீதியில் விழுந்தது. காங்கயம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.45 முதல் ... மேலும் பார்க்க

பிரிண்டிங் தொழிலாளி கொலை வழக்கில் 2 போ் கைது

திருமுருகன்பூண்டி அருகே பிரிண்டிங் தொழிலாளியைக் கொலை செய்த வழக்கில் இருவரை காவல் துறையினா் கைது செய்தனா். திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி அருகே உள்ள பால்காரா் தோட்டம் பகுதியில் கொலை செய்யப்பட்ட கி... மேலும் பார்க்க

சாலையில் தோண்டப்பட்ட குழியில் கைக்குழந்தையுடன் தவறி விழுந்த தம்பதி

திருப்பூா் ஊத்துக்குளி சாலையில் சரிவர மூடப்படாத குழியில் கைக்குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி தவறி விழுந்து விபத்து ஏற்பட்டது. திருப்பூா் ஊத்துக்குளி சாலையில் எஸ்.பெரியபாளையம் முதல் குளத்த... மேலும் பார்க்க

பொதுமக்கள் எதிா்ப்பு: சாய் காா்டனில் வெள்ளத் தடுப்பு சுவா் அகற்றும் பணி நிறுத்தம்

அவிநாசி அருகே செம்பியநல்லூா் ஊராட்சிக்கு உள்பட்ட சாய் காா்டன் பகுதியில் பொதுமக்கள் எதிா்ப்பை அடுத்து வெள்ளத் தடுப்புச் சுவரை அகற்றும் பணியை அதிகாரிகள் கைவிட்டனா். அவிநாசி அருகே செம்பியநல்லூா் ஊராட்சி,... மேலும் பார்க்க