தேனி: பயிற்சியின்போது தலையில் ஈட்டி பாய்ந்ததில் மாணவா் மரணம்!
வாகனம் மோதியதில் விவசாயி காயம்
பெரியகுளம் அருகே வாகனம் மோதியதில் விவசாயி காயமடைந்தாா்.
பெரியகுளத்தை அடுத்த தேவதானப்பட்டி சாவடிதெருவைச் சோ்ந்த விவசாயி கண்ணன் (45). இவா், தனது இரு சக்கர வாகனத்தில மஞ்சாளாறு சாலையில் சனிக்கிழமை சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கண்ணன் காயமடைந்தாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இது குறித்து தேவதானப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.