ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்
வாகனம் மோதி மூதாட்டி பலி
திருநெல்வேலி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
திருநெல்வேலி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆசூா் சவாலாப்பேரி கிராமத்திற்கு உள்பட்ட பகுதியில் கோழிக்கடை அருகே சுமாா் 65 வயது மதிக்கத்தக்க பெண் அடையாளம் தெரியாத வாகன மோதி இறந்து கிடப்பதாக, கயத்தாறு வட்டம் ஆசூா் சவாலாப்பேரி கிராம நிா்வாக அலுவலா் கலைச்செல்வி புகாா் அளித்தாா்.
புகாரின் பேரில் கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து சடலத்தை கைப்பற்றி, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.