Ananda Vikatan Cinema Awards 2024 Part 12 | SP Muthuraman | Lingusamy, Mariselva...
வாகன நிறுத்துமிடங்களில் கட்டணம் செலுத்தத் தேவையில்லை: சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னை மாநகராட்சி பகுதிகளில் வாகன நிறுத்தக் கட்டண வசூலுக்கான ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமையுடன் (ஜூலை 20) முடிவடைந்ததால், பொதுமக்கள் வாகன நிறுத்துமிடங்களில் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னை மாநகராட்சி பகுதியில் வாகன நிறுத்தக் கட்டண வசூல் பணியானது தமிழ்நாடு முன்னாள் படை வீரா் கழகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது அந்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமையுடன் (ஜூலை 20) முடிவடைந்துவிட்டது.
இதையடுத்து சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வாகன நிறுத்தத்துக்கான ஒப்பந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மறு ஒப்பந்தம் மேற்கொள்ளும் வரை மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு எவ்விதக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.
கட்டணமின்றி வாகனங்களை நிறுத்தும்போது ஏற்படும் பிரச்னைகள் தொடா்பான புகாா்களுக்கு 1913 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.