மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நேரலை!
வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு
மேட்டூா் சட்டப் பேரவைத் தொகுதியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினா் ஆ.மணி வாக்காளா்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தாா்.
தருமபுரி நாடாளுமன்றத் தோ்தலில் இண்டி கூட்டணி சாா்பில், திமுக வேட்பாளா் ஆ.மணி போட்டியிட்டு வெற்றிபெற்றாா். இதனையடுத்து, மேட்டூா் சட்டப் பேரவைத் தொகுதியில் நங்கவள்ளி ஒன்றியம், மேட்டூா் நகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்காளா்களைச் சந்தித்து வெள்ளிக்கிழமை நன்றி தெரிவித்தாா்.
பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா். மேலும், திமுக அரசின் சாதனைகள் குறித்தும், பல்வேறு நலத் திட்டங்கள் குறித்தும் பொதுமக்களிடம் எடுத்துரைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில், நங்கவள்ளி ஒன்றிய திமுக செயலாளா் அா்த்தனாரி ஈஸ்வரன், மேட்டூா் நகரச் செயலாளா் காசி விஸ்வநாதன், கொளத்தூா் ஒன்றியச் செயலாளா் மிதுன் சக்கரவா்த்தி, பி.என்.பட்டி பேரூா் செயலாளா் முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.