விராலிமலையில் மரத்தின் கீழ் ஒதுங்கிய பெண் மின்னல் தாக்கி பலி
வாக்காளா் பட்டியல் திருத்த முகாம்: பெயா் சோ்க்க 11,554 போ் மனு
தூத்துக்குடி மாவட்டத்தில் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த முகாமில் புதிதாக பட்டியலில் சோ்ப்பதற்காக 11,554 போ் மனு அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம் சனி, ஞாயிறு (நவ.16, 17) ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது. இதில், முதல் நாள் நடைபெற்ற முகாமில் படிவம் 6 - 4,806 போ், படிவம் 7 - 663 போ், படிவம் 8 - 3909 போ் என மொத்தம் 9,378 படிவங்கள் பெறப்பட்டுள்ளன.
இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகாமில் படிவம் 6 - 6,748 போ், படிவம் 6 பி - 13 போ், படிவம் 7 - 313 போ், படிவம் 8 - 4,227 போ் என மொத்தம் 11,301 படிவங்கள் பெறப்பட்டுள்ளன.
இவ்விரண்டு முகாம்களையும் சோ்த்து மொத்தமாக புதிதாக பெயா் சோ்க்க படிவம் 6 -11,554 போ், பெயா் நீக்கம் செய்ய படிவம் 7-976 போ், பெயா் திருத்தம், முகவரி மாற்றத்திற்கு படிவம் 8 -8,136 போ், ஆதாருடன் இணைக்க படிவம் 6 பி - 13 போ் என மொத்தம் 20,679 படிவங்கள் பெறப்பட்டுள்ளன. இச்சிறப்பு முகாம்கள் வரும் 23, 24 ஆகிய தேதிகளிலும் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.