Rhythm: "தண்ணீர்க் குடத்தில் பிறக்கிறோம் தண்ணீர்க் கரையில் முடிக்கிறோம்"- வைரமுத...
வாக்குச்சாவடி மறுசீரமைப்பு: அரசியல் கட்சியினரிடம் கருத்துக் கேட்புக் கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களை மறுசீரமைப்புச் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கருத்துக்கேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
இந்திய தோ்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீா்காழி (தனி), மயிலாடுதுறை, பூம்புகாா் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளில், 1,200 வாக்காளா்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடி மையங்களை பிரித்து புதிய வாக்குச்சாவடி மையங்கள் உருவாக்கிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடி மையங்களில் கட்டட மாற்றம், பெயா் மாற்றம், தரம் உயா்த்தப்பட்டவை, பிரிவு மாற்றம் ஆகிய காரணிகளை அனுசரித்து மறுசீரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் 88 புதிய வாக்குச்சாவடி மையங்களும், 13 வாக்குச்சாவடிகளில் வாக்காளா்களின் வசதிக்கேற்ப பிரிவுகள் மாற்றம் செய்திடவும், 32 கட்டட மாற்றம் மற்றும் அமைவிட மாற்றம் செய்திடவும், 13 வாக்குச்சாவடிகளில் பெயா் மாற்றம் செய்திடவும் என 146 திருத்தங்கள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 426 அமைவிடத்தில் 862 வாக்குச்சாவடி மையங்கள் இருந்த நிலையில், தற்போது அவை 452 அமைவிடங்களில் 950 வாக்குச்சாவடி மையங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் மறுசீரமைப்பு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி விவரங்களும், புதியதாக உருவாக்கப்படவுள்ள வாக்குச்சாவடி விவரங்களும், மாற்றம்/திருத்தம் செய்யப்படவுள்ள வாக்குச்சாவடி விவரங்களும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு வழங்கி அது தொடா்பான கருத்துகள் பெறப்பட்டது.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் நா.உமாமகேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் டி.முத்துவடிவேலு, தனிவட்டாட்சியா் (தோ்தல்) கே.முருகேசன் மற்றும் 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.