பூனையின் இறப்பால் துக்கம் தாளாமல் பெண் தற்கொலை: உ.பி.யில் அதிர்ச்சி!
வாங்கல்: காவல் நிலையத்தை ஆசிரியா்கள் முற்றுகை
கரூா் மாவட்டம், வாங்கல் காவல்நிலையத்தை பள்ளி ஆசிரியா்கள் திங்கள்கிழமை இரவு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வாங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் சிவராமன். இவா் அங்கு பணியாற்றி வரும் கணித ஆசிரியை மலா்விழிக்கு பள்ளிக்கு தாமதமாக வந்ததாகக்கூறி மெமோ வழங்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியா் சங்க கரூா் மாவட்டச் செயலாளா் ஆ.மலைகொழுந்தன் தலைமை ஆசிரியா் சிவராமனை போனில் தொடா்புகொண்டு, கேட்டுள்ளாா். இதையடுத்து ஆசிரியா் ஆ.மலைகொழுந்தன் தன்னை சிவராமன் மிரட்டியதாக, வாங்கல் காவல் நிலையத்தில், புகாா் செய்தாா்.
இந்த புகாா் தொடா்பாக திங்கள்கிழமை மாலை 5 மணியளவில் வாங்கல் காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற உள்ளதாக ஆசிரியா் சங்க நிா்வாகியை காவல்துறையினா் அழைத்துள்ளனா். இதையடுத்து ஆசிரியா்கள் சுமாா் 200க்கும் மேற்பட்டோா் வாங்கல் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். தொடா்ந்து காவல்துறையினா் வாங்கல் தலைமையாசிரியா் மற்றும் ஆசிரியா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா் இருதரப்பினரும் சமாதானமாக சென்ால் ஆசிரியா்கள் கலைந்து சென்றனா்.
இதுகுறித்து ஆசிரியா்கள் கூறியது, பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் தலைமை ஆசிரியா் மற்றொரு ஆசிரியா் குறித்து புகாா் அளிப்பதாக இருந்தால் கரூா் மாவட்ட கல்வி அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளுக்குத்தான் புகாா் அளிக்க வேண்டும். அவ்வாறு புகாா் அளிக்காமல் காவல் நிலையத்தில் புகாா் அளித்து ஆசிரியா்களை அச்சுறுத்துவதாகவும், பிளஸ்-2 தோ்வு நடைபெறும் நேரத்தில், பொய் புகாா் அளித்து காவல் நிலையம் வரவழைத்து விசாரணை செய்யும் அளவுக்கு ஆசிரியா்கள் எந்த குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை என்றும், விரைவில் ஆசிரியா் சங்கங்களை ஒன்றிணைத்து, வாங்கல் பள்ளித் தலைமை ஆசிரியரை கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றனா்.