கேரளத்துடனான பந்தம் ஆயுளுக்கும் இருக்கும்: விடைபெறும் ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான...
வாடிவாசல் அப்டேட்!
தயாரிப்பாளர் தாணு வாடிவாசல் திரைப்படம் குறித்து புதிய தகவலைப் பகிர்ந்துள்ளார்.
கங்குவா படப்பிடிப்பு முடிந்ததும் நடிகர் சூர்யா இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெற்றிமாறன் விடுதலை - 2 படப்பிடிப்பில் தீவிரமாக இருந்தார்.
இதனால், கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்து முடித்த சூர்யா அடுத்தாக ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிக்க: மிஷ்கின் - விஜய் சேதுபதி படத்தின் அப்டேட் பகிர்ந்த தயாரிப்பாளர்!
தற்போது, இயக்குநர் வெற்றிமாறனும் விடுதலை - 2 வெளியீட்டை முடித்துள்ளதால், வாடிவாசல் திரைப்படத்தின் பணிகள் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் சென்னையில் துவங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய வாடிவாசல் படத்தின் தயாரிப்பாளர் எஸ். தாணு, “வாடிவாசல் படத்திற்கான வேலைகள் துவங்கியுள்ளன. படத்திற்காக லண்டனில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனிமேஷன் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. இனி நடக்க வேண்டியது நடக்கும்” எனக் கூறியுள்ளார்.