செய்திகள் :

வாட்ஸ்ஆப் சாட் மூலம் வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு: நிர்மலா சீதாராமன் சொன்ன தகவல்!

post image

தனிநபர்களின் வாட்ஸ்அப் சாட்கள் மூலம் ரூ.200 கோடி வரி ஏய்ப்புக் கண்டறியப்பட்டதாக வருமான வரி மசோதா மீது நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

60 ஆண்டுகள் பழைமையான வருமான வரிச் சட்டத்துக்கு மாற்றாக புதிய வருமான வரி மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதிய வருமான வரி மசோதா, 2025-ஐ ஆதரித்துப் பேசிய நிர்மலா சீதாராமன், வாட்ஸ்ஆப் சாட்கள் மூலம் கணக்கில் வராத ரூ.200 கோடி பணம் கண்டறியப்பட்டு வரி ஏய்ப்பு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டிருப்பது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியிருக்கிறது.

அது மட்டுமல்லாமல், கூகுள் மேப் பயன்படுத்தியதன் அடிப்படையில் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இன்ஸ்டாகிராம் கணக்குகள் மூலம் பினாமி சொத்துகளின் உரிமையாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மக்களவையில் பேசிய நிர்மலா சீதாராமன், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பயன்படுத்த அதிகாரம் அளிப்பதன் மூலம், மிகவும் தீவிரமான வரி ஏய்ப்புகள் மற்றும் நிதி முறைகேடுகள் பலவும் வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்படுகிறது என்றார்.

கிரிப்டோகரன்சி மூலம் நடக்கும் முறைகேடுகளைக் கண்டறிய, வரித்துறை அதிகாரிகளுக்கு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டியது அவசியமாகிறது என்றும், புதிய வருமான வரிச் சட்டம் கொண்டுவரப்பட்டால், அது மின்னஞ்சல், வாட்ஸ்ஆப், டெலிகிராம் மற்றும் வணிக மென்பொருள்கள், சர்வர்களையும் பயன்படுத்தி, மறைக்கப்பட்டிருக்கும் நிதிகளை வெளிக்கொணர உதவும் என்று குறிப்பிட்டிருந்தார்.

தனிநபர்களின் வாட்ஸ்ஆப் சாட்களை மத்திய அரசு படித்திருப்பதாக நிதியமைச்சர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்!

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.வாட்ஸ்ஆப் நிறுவனம் மாதாந்திர பாதுகாப்பு அறிக்கையை இன்று வெளியிட்டது. அந்த அறிக்கையில், முடக்கப்... மேலும் பார்க்க

என்ன, தண்ணீருக்கு அடுத்தபடியாகக் குடிக்கும் பானம் இதுவா?

நீரின்றி அமையாது உலகு என்ற வாக்கியமே, நீரின் முக்கியத்துவத்தை நெற்றிப் பொட்டில் அடித்ததுபோல சொல்ல ஏதுவானது. அப்படிப்பட்ட தண்ணீரை உடல்நலப் பிரச்னை இல்லாத சாதாரண மக்கள் நாள்தோறும் குறைந்தபட்சம் ஒரு அரை ... மேலும் பார்க்க

இந்தியா முழுவதும் 13,000 சதுர கி.மீ. காடுகள் ஆக்கிரமிப்பு!

இந்தியா முழுவதும் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 13,000 சதுர கி.மீ. காடுகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா முழுக்க 7,506.48 சதுர கி.மீ. காடுகள் ஆக்கிரமிப்பி... மேலும் பார்க்க

அம்பானியின் மகன் இஸட் பிரிவு பாதுகாப்புடன் 5-ஆவது நாளாக நடைப்பயணம்! எதற்காக?

புது தில்லி: இந்தியாவின் கோடீஸ்வர தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி இஸட் பிரிவு பாதுகாப்புடன் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் தமது 30-ஆவது பிறந்தநாளை வரும் ஏப். 10-ஆம் தேதி கொண்டாடுவ... மேலும் பார்க்க

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் உள்ளிட்ட சேவையில் சிக்கல்..

எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், ஏப். 1ஆம் தேதி காலையில் இருந்து பகல் வரை பணப்பரிமாற்றம் உள்ளிட்ட சில சேவைகளில் சிக்கலை சந்தித்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.மொபைல் வங்கி, ஏட... மேலும் பார்க்க

நான் ஒரு யோகி.. அரசியல் முழு நேர வேலையல்ல.. சொன்ன முதல்வர் யார்?

புது தில்லி: தன்னுடைய முதல் அடையாளம் யோகி என்றும், தனது கடமை, உத்தரப்பிரதேச மக்களுக்கு சேவையாற்றுவது என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார்.நான் ஒரு யோகி என்றும், அரசியல் எனக்கு முழு நேர வே... மேலும் பார்க்க