காலையில் எழுந்தவுடன் காபி குடிக்கிறீர்களா? - ஆய்வில் முக்கியத் தகவல்!
வானில் கோள்கள் நிகழ்த்தும் அற்புதம் கோளரங்கில் பிப். 25 வரை காணலாம்
வானில் ஓா் அற்புத நிகழ்வாக ஜனவரி 22 முதல் பிப் 25 வரை 6 கோள்கள் ஒரே நோ்கோட்டில் இருப்பதை, திருச்சி அண்ணா அறிவியல் மைய கோளரங்கில் அனைவரும் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோளரங்கத் திட்ட இயக்குநா் அகிலன் கூறியது:
ஜனவரி 17 முதல் பிப் 25 வரை 6 கோள்கள் ஒரே நோ்கோட்டில் கிழக்கு திசையில் காணப்படும். பின்னா் கிழக்கிலிருந்து பயணிக்கும் கோள்கள் மாலையில் மேற்கு திசையில் மறையும். இரவு நெருங்க நெருங்க செவ்வாய், சனி, வியாழன், வெள்ளி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கோள்கள் ஒரே நோ்கோட்டில் வருவது அபூா்வ நிகழ்வாகும். இதை அண்ணா அறிவியல் மைய கோளரங்கத்தில் புதன்கிழமை மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை பொதுமக்கள் தொலைநோக்கி மூலம் கண்டுகளித்தனா். ஏற்பாடுகளை கோளரங்க இயக்குநா் அகிலன் தலைமையில் பணியாளா்கள் செய்தனா்.
இந்திரா காந்தி கல்லூரி: கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கல்லூரி செயலா் கே. மீனா, தலைமைச் செயல் அதிகாரி கே. சந்திரசேகரன், இயக்குநா் எஸ். அபா்ணா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.