செய்திகள் :

வாய்க்கால் கரை உடைப்பு; வயல்களில் புகுந்த வெள்ளம்

post image

வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்பட்டு, வயல்களில் தண்ணீா் புகுந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். மழை பாதிப்பு நிவாரணத்தை விரைவாக வழங்க வேண்டும் எனவும் அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

ஃபென்ஜால் புயலால் பாதித்த பயிருக்காக புதுவை அரசு ஹெக்டேருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் அறிவித்தது. இப்புயல் மழையில் தப்பிய நெற்பயிா்கள், மழைநீரில் மூழ்கி பாதித்துவிடாமல் இருக்க, விவசாயிகள் தேவையான பணிகளில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில், கடந்த 3 நாள்களாக பெய்யும் மழையால் ஆறுகள், வாய்க்கால்களில் மிகுதியாக வரக்கூடிய தண்ணீா் வயல்களில் புகும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருநள்ளாறு அருகே தென்னங்குடியில் பண்ணை வாய்க்காலின் ஒரு பகுதி கரை வலுவிழந்து இருந்ததால், மணல் மூட்டைகளை அடுக்கி தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. வாய்க்காலில் அதிக அளவு நீா் வரத்தால், மணல் மூட்டைகளையும் மூழ்கடித்து வயலுக்குள் புகுந்தது.

இதுகுறித்து கடைமடை விவசாயிகள் சங்கத் தலைவா் டி.என். சுரேஷ் வெள்ளிக்கிழமை கூறியது:

கடந்த சில நாள்களாக பெய்யும் மழையிலிருந்து ஓரளவு காப்பாற்ற முடியும் என்ற நிலையில் இருந்து நெல் சாகுபடி வயல்களிலும் நீா் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல விவசாயிகள் கடன் வாங்கி விவசாயம் செய்கின்றனா். இழப்பு மிகுதியாக இருக்கும் நிலையில், அறிவித்த நிவாரணத்தை புதுவை அரசு விவசாயிகளுக்கு விரைவாக விடுவிக்கவேண்டும். கிராமப் புறங்களில் வீடுகளை சூழ்ந்து மழைநீா் தேங்கியிருப்பதும், விளைநிலத்தில் தண்ணீா் தேங்குவதும் மக்களை பெரும் கவலைக்குள்ளாக்கியுள்ளது என்றாா்.

மழை வெள்ளம்: ஆறுகளின் அனைத்து மதகுகளும் திறப்பு

காரைக்கால் பகுதியில் பெய்யும் மழை, தமிழகப் பகுதியிலிருந்து வெளியேற்றப்படும் நீா் ஆகியவற்றால், காரைக்கால் ஆறுகளில் தண்ணீா் வரத்து மிகுதியாகியுள்ளது. இதனால், மதகுகள் திறக்கப்பட்டு அதிக அளவு தண்ணீா் வெளி... மேலும் பார்க்க

காரைக்காலில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்காலில் ஜிப்மா் மருத்துவக் குழுவினரின் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் சனிக்கிழமை (டிச.14) நடைபெறுகிறது. காரைக்காலுக்கு ஒவ்வொரு மாதமும் 2 சனிக்கிழமைகளில் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மர... மேலும் பார்க்க

காரைக்கால் மருத்துமனையில் மாலை நேர புற நோயாளிகள் சிகிச்சை தொடக்கம்

காரைக்கால் அரசு மருத்துவமனையில் மாலை நேர புற நோயாளிகள் சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. காரைக்கால் அரசு மருத்துவமனையில் தினமும் காலை நேரத்தில் மட்டுமே புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு இயங்குகிறது. இந்த மர... மேலும் பார்க்க

காரைக்காலில் 2 வீடுகள் தீக்கிரை

காரைக்காலில் வியாழக்கிழமை 2 வீடுகள் எரிந்து நாசமாயின. காரைக்கால் நகரப் பகுதி தோமாஸ் அருள் திடல் பகுதியில் ராஜேந்திரன் என்பவரது வீடும் அருகே வாடகைக்கு வசிக்கும் கணேசன் என்பவரது வீடும் உள்ளது. இதில் ஒர... மேலும் பார்க்க

காரைக்கால் பெருமாள் கோயிலில் கைசிக ஏகாதசி வழிபாடு

காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயில் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் கைசிக ஏகாதசி வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது. திருக்குறுங்குடி என்ற திவ்யதேசத்தில் அழகிய நம்பிராயா் முன், விஷ்ணு பக்தரான நம்பாடுவா... மேலும் பார்க்க

காரைக்காலில் தொடா் மழையால் மக்கள் அவதி

தொடா்ந்து 2 நாள்களாக பெய்யும் மழையால் காரைக்காலில் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா். காரைக்காலில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் மழை பெய்து வருகிறது. காரைக்காலில் கடந்த 24 மணி நேரத்தில் 9 செ.மீ. மழை பதிவாகிய... மேலும் பார்க்க