செய்திகள் :

வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க... மின் உற்பத்தி நிறுவனத்தில் வேலை!

post image

பொதுத்துறை நிறுவனமான தேசிய ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். NH/Rectt./05/2023-24

மொத்த காலியிடங்கள்: 118

பணி: Trainee Officer (HR)

தகுதி: மனித வள மேலாண்மை அல்லது தொழில்துறை உறவுகள் போன்ற துறைகளில் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முழுநேர, இரண்டு ஆண்டு முதுகலை பட்டம், டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Trainee Officer (Public Relations)

தகுதி: குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முழுநேர முதுகலை பட்டப்படிப்பு, கம்யூனிகேஷன் பிரிவில் டிப்ளமோ, ஊடகவியல் அல்லது பப்ளிக் ரிலேஷன்ஸ் போன்ற பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Trainee Officer (Law)

தகுதி: குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் சட்டத்துறையில் மூன்றாண்டு எல்எல்பி அல்லது 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

பணி: Senior Medical Officer (SMO)

தகுதி: மருத்துவத் துறையில் எம்பிபிஎஸ் முடித்து குறைந்தபட்சம் இரண்டு ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

இதற்கு விண்ணப்பித்துவிட்டீர்களா ? என்எல்சி நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000

வயதுவரம்பு: 30.12.2024 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் டிசம்பர் 2023,ஜூன் 2024 கேட்,கிளாட் போன்ற ஏதாவதொரு தேர்வுகளில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள், நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு குறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.600 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nhpcindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.12.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

என்எல்சி நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பட்டதாரி பொறியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்... மேலும் பார்க்க

8,997 சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு!

சத்துணவுத் திட்டத்தினை சீரிய முறையில் செயல்படுத்திட, தற்போது காலியாக உள்ள மொத்த பணியிடங்களில் அவசர அவசியம் கருதி, 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்திட சமூக நலத்துறை ... மேலும் பார்க்க

ஓஎம்ஆர் முறையிலேயே குரூப் 2ஏ முதன்மைத் தேர்வு!

கணினி வழியில் நடத்த இருந்த குரூப் 2ஏ முதன்மைத் தேர்வை ஓஎம்ஆர் முறையிலேயே நடத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) முடிவு செய்துள்ளது.தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 2,540 ... மேலும் பார்க்க

சென்னை உயர்நீதிமன்றத்தில் டெக்னிக்கல் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 75 டெக்னிக்கல் பணியிடங்களை ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் வரும் 23 ஆம் தேதிக்குள் ஆ... மேலும் பார்க்க

அரசு உதவி வழக்குரைஞா் தோ்வு ரத்து: டிச. 22-இல் மறு தோ்வு

சென்னை: கணினி வழியாக நடைபெற்ற அரசு உதவி வழக்குரைஞா் தோ்வு ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது. மறுதோ்வு வரும் 22-ஆம் தேதி நடைபெறும் என்று தோ்வாணையத்தின் தோ்வு... மேலும் பார்க்க

குரூப் 2 முதன்மைத் தோ்வு: சான்றுகளை பதிவேற்ற நாளை கடைசி

சென்னை: குரூப் 2 முதன்மைத் தோ்வுக்கு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய புதன்கிழமை (டிச. 18) கடைசி நாளாகும். இதற்கான நினைவூட்டலை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது. குரூப் 2 மற்றும் 2ஏ ... மேலும் பார்க்க