செய்திகள் :

வாரம் ஒன்று.. ஆண்டுக்கு 50 ராக்கெட் ஏவ வேண்டும்: இலக்கு நிர்ணயித்த மோடி!

post image

நாட்டின் நிர்வாகத்தையும் அன்றாட வாழ்க்கையையும் மாற்றுவதில் விண்வெளி தொழில்நுட்பத்தின் பங்கை பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.

புது தில்லியில் நடந்த தேசிய விண்வெளி தின கொண்டாட்டத்தில் கானொளி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது,

உங்கள் அனைவருக்கும் தேசிய விண்வெளி தின வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். தேசிய விண்வெளி தினம் நமது இணைஞர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விஷயம். விண்வெளி துறையில் இணைஞர்களுக்கு ஆர்வத்தை அதிகரிக்க இஸ்ரோ சவால் நிறைந்த பல்வேறு முயற்சிகளை எடுத்ததில் மகிழ்ச்சி.

இன்று விண்வெளி தொழில்நுட்பமும் இந்தியாவில் நிர்வாகத்தின் ஒரு பகுதியாக மாறி வருகிறது. பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் செயற்கைக்கோள் அடிப்படையிலான மதிப்பீட்டாக இருந்தாலும் சரி, செயற்கைக்கோள்கள் மூலம் மீனவர்களுக்கு வழங்கப்படும் தகவல் மற்றும் பாதுகாப்பாக இருந்தாலும் சரி... அது பேரிடர் மேலாண்மையாக இருந்தாலும் சரி, பிரதமர் கதி சக்தி தேசிய மாஸ்டர் திட்டத்தில் புவிசார் தரவுகளைப் பயன்படுத்துவதாக இருந்தாலும் சரி... இன்று, விண்வெளியில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது, என்று பிரதமர் கூறினார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் விண்வெளித் துறையில் ஐந்து சிறப்பு வாய்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உருவாக்க முடியுமா? இப்போது இந்தியாவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 5 ஏவுதல்கள் நடைபெறுகிறது. இந்த ஏவுதலில் தனியார் துறையின் பங்கு இருக்க வேண்ம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாம் ஒவ்வொரு ஆண்டும் 50 ராக்கெட்டுகளை ஏவும் நிலையை அடைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஒவ்வொரு வாரமும் ஒரு ராக்கெட்டை நாம் ஏவ வேண்டும். விண்வெளி தொழில்நுட்பமும் இந்தியாவின் வளர்ச்சியில் முக்கியமான ஒன்றாக மாறி வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சந்திரனின் தென் துருவத்தை அடைந்து வலாற்றைப் படைத்த முதல் நாடாக இந்தியா மாறியது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றி ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தினார். இந்தியாவின் விண்வெளி வீரர் குழுவைத் தயார் செய்யப் போவதாகவும் அவர் தெரிவித்தார்

2035 ஆம் ஆண்டுக்குள், இந்தியா "சொந்த விண்வெளி நிலையத்தை" நிறுவும். 2040 ஆம் ஆண்டுக்குள் இந்தியா நிலவில் தரையிறங்கும் என்றும், இது இந்தியாவின் விண்வெளித் திட்டத்தை உலகின் தலைசிறந்த ஒன்றாக மாற்றும் இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Prime Minister Narendra Modi on Saturday underscored the growing integration of space technology into the fabric of India's governance, emphasising its impact on sectors ranging from crop insurance and disaster management to fisheries and infrastructure planning.

வாக்குத் திருட்டு விவகாரம்: வீடுவீடாகச் சென்று பாஜகவுக்கு எதிராக காங். பிரசாரம்!

ஹைதராபாத்: வாக்குத் திருட்டு விவகாரத்தில் வீடுவீடாகச் சென்று காங்கிரஸ் கட்சியினர் பாஜகவுக்கு எதிராக பிரசாரத்தில் இன்று(ஆக. 23) ஈடுபட்டனர்.கடந்தாண்டு மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் ‘வாக்குத... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் 2 கோடி போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 2 பேர் கைது

ஜார்க்கண்டில் 2 கோடி போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஜார்க்கண்டின் ராஞ்சியில் நியூ மார்க்கெட் சௌக் அருகே பேருந்தில் இருந்து காரில் மாற்றப்பட்டபோத... மேலும் பார்க்க

உள்நாட்டில் தயாரிக்கப்படும் முதல் செமிகண்டக்டர் சிப் 2025 இறுதிக்குள் சந்தைக்கு வரும்: பிரதமர் மோடி

இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் செமிகண்டக்டர் சிப் இந்தாண்டு இறுதிக்குள் சந்தைக்கு வரும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.புது தில்லியில் நடைபெற்றதனியார் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றுப் பேசிய ... மேலும் பார்க்க

அனில் அம்பானியால் எஸ்பிஐ-க்கு ரூ. 2,929 கோடி இழப்பு: சிபிஐ சோதனை முடிவு!

அனில் அம்பானியால் பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) ரூ. 2,929.05 கோடி இழப்பு ஏற்பட்டதாக அளிக்கப்பட்டுள்ள புகாரின்பேரில், சிபிஐ அதிகாரிகளால் இன்று(ஆக. 23) அனில் அம்பானி இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை மு... மேலும் பார்க்க

அமித் ஷாவுடன் சி. பி. ராதாகிருஷ்ணன் ஆலோசனை!

மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று(ஆக. 23) ஆலோசனை மேற்கொண்டார்.குடியரசு துணைத் தலைவா் தோ்தல் செப்.9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பாஜக தலைமையிலா... மேலும் பார்க்க

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரின் மகனுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்!

மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரின் மகன் சைதன்ய பகேலை, 14 நாள் நீதிமன்றக் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.சைதன்ய பகேல் கைது குறித்து அமலாக்கத் துறை தரப்ப... மேலும் பார்க்க