முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நியூசிலாந்து அபாரம்!
வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!
தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஜூலை 04 - 10) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். உழைப்புக்கேற்ற வருமானம் உண்டு. போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உடன்பணிபுரிவோருடன் நல்லுறவோடு இருப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து நடப்பீர்கள். வியாபாரிகள் புதிய அனுபவம் பெறுவீர்கள். விவசாயிகள் கால்நடைகளைக் கவனத்துடன் கையாள்வீர்கள்.
அரசியல்வாதிகளின் கட்சிப் பணி எதிர்பார்த்தபடி நிறைவடையும். கலைத் துறையினரின் பொருளாதார நிலை மேம்படும். பெண்களின் மனதில் சிந்தனைகள் உண்டாகும். மாணவர்களுக்கு வெளியூர் பயணங்கள் சாத்தியமாகும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
தொழிலில் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளுக்கும் செவி சாய்ப்பீர்கள். தடைபட்ட சில வரவுகள் கிடைக்கும். கௌரவமும் அந்தஸ்தும் கூடும்.
உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வியாபாரிகள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். விவசாயிகள் பிறரை அனுசரித்து நடப்பீர்கள்.
அரசியல்வாதிகள் நினைத்தவை நிறைவேறும். கலைத் துறையினரின் திறமைகள் வெளிப்படும். பெண்கள் வசிக்கும் வீட்டை நவீனப்படுத்துவீர்கள். மாணவர்களின் மனதில் தெளிவு உண்டாகும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
காரியங்கள் நினைத்தபடி நடக்கும். பிரிந்திருந்த உறவினர்கள் குடும்பத்தோடு இணைவார்கள். பிரச்னைகளுக்குச் சரியாக முடிவெடுப்பீர்கள். புகழும் கௌரவமும் உயரும்.
உத்தியோகஸ்தர்கள் வருவாயைச் சேமிப்பீர்கள். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். விவசாயிகள் பணிகளில் அலைச்சல் உண்டாகும். அரசியல்வாதிகள் புதியவர்களின் அறிமுகத்தால் மாற்றம் பெறுவார்கள். கலைத் துறையினருக்கு லாபகரமான வாய்ப்பு அமையும். பெண்களுக்கு தனவரவு உண்டு. மாணவர்களுக்கு வெளியூர் சென்று படிக்கும் வாய்ப்புகள் அமையும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். விலையுயர்ந்த பொருள்களை வாங்குவீர்கள். பயணங்களைச் செய்வீர்கள். புதிய நுணுக்கங்களைக் கற்பீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு உண்டு. வியாபாரிகள் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகள் சந்தையில் எதிர்பார்த்த விலையைப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு மக்கள் பணிகளில் மேன்மை உண்டாகும். கலைத் துறையினர் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பெண்கள் தங்களுக்குப் பிடித்தவற்றை வாங்குவீர்கள். மாணவர்கள் நண்பர்களோடு நட்புறவோடு இருப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)
காரியங்களில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். உயர்ந்தோரிடம் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். ஆன்மிக ஈடுபாடு கூடும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் கவனம் செலுத்துவீர்கள். வியாபாரிகளின் நீண்ட நாள் ஆசை நிறைவேறும். விவசாயிகளுக்கு கடன் தொல்லை இருக்காது.
அரசியல்வாதிகள் கவனமாக இருக்கவும். கலைத் துறையினர் பணவரவைக் காண்பீர்கள். பெண்கள் குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிவீர்கள். மாணவர்கள் கடினமான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
உடல் ஆரோக்கியமும் மனவளமும் சிறக்கும். பிள்ளைகள் எண்ணம் அறிந்து செயல்படுவார்கள். குடும்பத்துடன் கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள். சொத்துகளில் சிக்கல் தீரும்.
உத்தியோகஸ்தர்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய முறைகளைக் கையாள்வீர்கள். விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்குவீர்கள்.
அரசியல்வாதிகளின் இழுபறியான பணிகள் முடிவடையும். கலைத் துறையினர் பிறருக்கு உதவுவீர்கள். பெண்கள் பெற்றோரின் ஆதரவு அதிகமாகப் பெறுவீர்கள். மாணவர்கள் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - ஜூலை 18, 19.
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்
குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். செல்வாக்கு உயரும். பொது காரியங்களை நடத்துவீர்கள். உறவினர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு மன மகிழ்ச்சி அளிக்கும் விஷயங்கள் நடந்தேறும். வியாபாரிகள் தொழிலில் புதிய இலக்குகளை நிர்ணயிப்பீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளைப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் சிறிய அலைச்சல்களைக் காண்பீர்கள். கலைத் துறையினருக்கு நன்மைகள் கிடைக்கும். பெண்கள் கணவருடன் அன்புடன் நடப்பீர்கள். மாணவர்கள் பிறரிடம் இணக்கமாக நடப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - ஜூலை 20, 21.
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
கடினமாக உழைப்பீர்கள். சிக்கனத்தைக் கையாண்டு சேமிப்பீர்கள். பிரச்னைகள் படிப்படியாகக் குறையும். புதிய முயற்சிகளில் பொறுமை தேவை.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் திட்டமிட்டபடி முடியும். வியாபாரிகள் விட்டு கொடுத்து நடப்பீர்கள். விவசாயிகளுக்கு நிலுவைப் பணம் வசூலாகும்.
அரசியல்வாதிகள் பொறுப்புணர்வோடு நடப்பீர்கள். கலைத் துறையினர் எதிர்பார்த்த உதவிகளைப் பெறுவீர்கள். பெண்கள் ஆடை, அணிகலன்களை வாங்குவீர்கள். மாணவர்களுக்கு நல்ல மாற்றம்
உண்டாகும்.
சந்திராஷ்டமம் - ஜூலை 22, 23.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
தொழிலில் அறிவுரைகளை அளிப்பீர்கள். பொறுமை அவசியம். நீண்டநாள் ஆசை நிறைவேறும். பெற்றோர் தேவையான ஆதரவை அளிப்பார்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகளில் மரியாதை அதிகரிக்கும். வியாபாரிகள் பிறரிடம் கவனமாக இருக்கவும். விவசாயிகள் புதிய குத்தகைகளில் கவனம் தேவை.
அரசியல்வாதிகளுக்கு முயற்சிக்கேற்ப ஆதரவு உண்டு. கலைத் துறையினர் பிறரிடம் நெருக்கம் காட்டுவீர்கள். பெண்களுக்கு கணவரின் குடும்பத்தாரோடு நெருக்கம் அதிகரிக்கும். மாணவர்கள்
ஆசிரியர்களின் பாராட்டைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - ஜூலை 24.
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
தொழிலில் புதிய அனுபவம் கிடைக்கும். கடன் பிரச்னைகள் குறையும். முன்னேற்றத்தைக் காண்பீர்கள். நிர்வாகத் திறமை வெளிப்படும்.
உத்தியோகஸ்தர்கள் புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார். விவசாயிகள் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள் தொண்டர்களின் எண்ணங்களை அறிவீர்கள். கலைத் துறையினர் வெளியூரில் நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
மனம் விட்டு பேசி, பிரச்னைகளைத் தீர்ப்பீர்கள். காணாமல் போன பொருள் திரும்பக் கிடைக்கும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். பொருளாதார நிலை சீராகும்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் தேவையற்ற கருத்துகளைப் பரிமாறாதீர்கள். வியாபாரிகள் புதிய கடன்களை வாங்க வேண்டாம். விவசாயிகள் மாற்றுப்பயிர்களால் லாபம் பெறுவீர்கள்.
கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள் பெண்கள் உடல் நலம், மன வளம் மேம்பட யோகா பயிற்சியில் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் கல்வி உதவித்
தொகையை பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
சிந்தனைகளில் தயக்கம் மறையும். இறைவழிபாடு மனதுக்கு அமைதியைத் தரும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள் புதிய முயற்சிகளில் கவனமாக இருக்கவும். வியாபாரிகள் புதியவர்களை நம்பி கடன் கொடுக்க வேண்டாம். விவசாயிகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும்.
அரசியல்வாதிகள் கட்சியில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கலைத் துறையினர் புதிய சாதனைகளைப் படைப்பீர்கள். பெண்கள் குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். மாணவர்கள் பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.