முதல் டி20: மழையால் ஓவர்கள் குறைப்பு; அயர்லாந்துக்கு 78 ரன்கள் இலக்கு!
வார விடுமுறை: 627 சிறப்புப் பேருந்துகள்
வார விடுமுறை தினங்களை சனி, ஞாயிறு (பிப். 22, 23) முன்னிட்டு சென்னை மற்றும் பிற இடங்களிலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை (பிப். 21) 245 பேருந்துகளும், சனிக்கிழமை (பிப். 21) 240 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
மேலும், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 51 பேருந்துகளும், சனிக்கிழமை 51 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. இதுமட்டுமன்றி, மாதாவரத்திலிருந்து வெள்ளிக்கிழமை 20 பேருந்துகளும், சனிக்கிழமை 20 பேருந்துகள் என மொத்தம் 627 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்புவதற்கு வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப, அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.