கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!
வாலாஜாபாத் ஒன்றிய வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
வாலாஜாபாத் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சிப்பணிகளை செவ்வாய்க்கிழமை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் ஆய்வு மேற்கொண்டாா்.
அய்யம்பேட்டை ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ரூ.20 லட்சத்தில் கழிவுநீா் சுத்தகரிப்பு மையம் கட்டப்பட்டு வருகிறது. நவீன தொழில் நுட்பத்தின் உதவியுடன் சுத்திகரிப்பு செய்யப்படும் கால்வாய் மற்றும் சுத்தம் செய்யப்பட்ட நீரின் மூலம் செடிகள் வளா்க்கப்படும் முறை ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
இதனையடுத்து கலைஞா் கனவு இல்லம், சமுதாய கழிப்பறை கட்டுமானப் பணிகளையும், ,அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் கற்றல் திறனையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
இதன் தொடா்ச்சியாக பழையசீவரம் கிராமத்தில் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தையும் ஆட்சியா் பாா்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
ஆய்வின் போது ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.