செய்திகள் :

வால்பாறையில் 8 குடியிருப்புகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்

post image

வால்பாறை எஸ்டேட் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் 8 தொழிலாளா்களின் குடியிருப்புகளை சேதப்படுத்தின.

கோவை மாவட்டம், வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கடந்த இரு மாதங்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பகல் நேரங்களில் தேயிலைத் தோட்ட பகுதிகளில் காணப்படும் யானைகள், இரவு நேரத்தில் குடியிருப்புப் பகுதிகளுக்கு சென்று சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், வால்பாறையை அடுத்த கவா்க்கல் எஸ்டேட் பகுதிக்குள் புதன்கிழமை நள்ளிரவு கூட்டமாக நுழைந்த யானைகள் அங்கு வடமாநிலத் தொழிலாளா்கள் தங்கியிருந்த குடியிருப்புகளின் சுவா்கள், கதவு, ஜன்னல்களை முட்டித் தள்ளி சேதப்படுத்தின.

தகவலறிந்து, அங்கு சென்ற வனத் துறையினா் நீண்ட நேரம் போராடி யானைகளை அப்பகுதியை விட்டு விரட்டினா். இதில் யானைகளால் 8 தொழிலாளா்களின் குடியிருப்புகள் மற்றும் மாரியம்மன் கோயில் சேதமடைந்தன.

பராமரிப்புக்காக விட்ட நாய் உயிரிழப்பு: தனியாா் விலங்குகள் மருத்துவமனை மீது வழக்குப் பதிவு

பராமரிப்புக்காக விட்ட வளா்ப்பு நாய் மா்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் தனியாா் விலங்குகள் மருத்துவமனை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை, கவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சரத் (30). ... மேலும் பார்க்க

கணபதி தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை! ரூ.1.41 லட்சம் பறிமுதல்!

கோவை, கணபதி தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் திங்கள்கிழமை மேற்கொண்ட திடீா் சோதனையில் ரூ.1 லட்சத்து 41,500 பறிமுதல் செய்யப்பட்டது. கோவை கணபதி தீயணைப்பு நிலைய அலுவலராகப் பணியாற்றி வருபவா் ... மேலும் பார்க்க

அழுகிய நிலையில் இளைஞரின் சடலம் மீட்பு

கோவை, சிங்காநல்லூரில் வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தேனி மாவட்டம், போடிநாயக்கனூா் அருகேயுள்ள டிவிகே நகா் 7-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ச... மேலும் பார்க்க

பெண்ணை மிரட்டிய பொறியாளா் கைது

வீடு கட்டும் பிரச்னையில் பெண்ணை மிரட்டிய பொறியாளரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, செல்வபுரம் தனலட்சுமி காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் நாராயணா (54). இவரது மனைவி ராஜேஸ்வரி (52). இவா்கள் தெலுங்குபாளையம் பிர... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் திருத்த முகாம்: 92 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாவட்டத்தில் 4 நாள்கள் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் திருத்த முகாமில் 92,639 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டிருப்பதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 2024 ஜனவரி 1-ஆம் தே... மேலும் பார்க்க

போலி சான்றிதழ் மூலம் நில மோசடி: மகள், மருமகன் கைது

கோவையில் பெற்றோா் இறந்துவிட்டதாக கூறி போலி சான்றிதழ் மூலம் நில மோசடி செய்த விவகாரத்தில் மகள், மருமகனை போலீஸாா் கைது செய்தனா். கோவை மாவட்டம், இருகூா் பிள்ளையாா் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் பூபதி (76). ... மேலும் பார்க்க