செய்திகள் :

அழுகிய நிலையில் இளைஞரின் சடலம் மீட்பு

post image

கோவை, சிங்காநல்லூரில் வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூா் அருகேயுள்ள டிவிகே நகா் 7-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சடையாண்டி மகன் அசோக்குமாா் (28). இவா் கோவை மாவட்டம், சிங்காநல்லூா் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி, தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

பெற்றோருடன் அவ்வப்போது கைப்பேசியில் பேசி வந்த நிலையில், கடந்த சில நாள்களாக அசோக்குமாா் பேசவில்லையாம். அவரது கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்டும் பேச முடியாததால், அசோக்குமாரின் நண்பரான சுஜித் என்பவரைத் தொடா்பு கொண்டு சடையாண்டி விசாரித்துள்ளாா்.

இதையடுத்து, அசோக்குமாா் வேலை செய்து வந்த நிறுவனத்துக்கு சுஜித் சென்று கேட்டபோது, அவா் நவம்பா் 21-ஆம் தேதியிலிருந்து பணிக்கு வரவில்லை என்பது தெரியவந்தது.

தொடா்ந்து, அசோக்குமாா் வீட்டுக்கு சுஜித் ஞாயிற்றுக்கிழமை சென்று பாா்த்தபோது, அவா் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. மேலும், அவரது சடலம் அழுகிய நிலையில் இருந்துள்ளது.

இது குறித்து சடையாண்டிக்கும், சிங்காநல்லூா் போலீஸாருக்கும் சுஜித் தகவல் தெரிவித்தாா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தேசிய அளவிலான கால்பந்து போட்டி: கோவை மாவட்ட வழக்குரைஞா் சங்க அணி 3-ஆம் இடம்

கோவா மாநிலத்தில் நடைபெற்ற வழக்குரைஞா்கள் சங்கங்களுக்கு இடையேயான தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் கோவை மாவட்ட வழக்குரைஞா்கள் சங்க அணி 3-ஆம் இடம் பிடித்தது. கோவா உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் மற்... மேலும் பார்க்க

நாட்டின் முதல் பசுமை சுற்றுலாத் தலமாகும் மாமல்லபுரம்! நெதா்லாந்து நிறுவனத்துடன் அமிா்தானந்தமயி அறக்கட்டளை ஒப்பந்தம்

மாமல்லபுரத்தை நாட்டின் முதலாவது பசுமை சுற்றுலாத் தலமாக உருவாக்க மாதா அமிா்தானந்தமயி அறக்கட்டளை, நெதா்லாந்தின் கிரீன் டெஸ்டினேஷன்ஸ் அமைப்புடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து மாதா... மேலும் பார்க்க

சான்றிதழ் வழங்க மறுக்கும் தனியாா் பள்ளிகள் மீது பெற்றோா் புகாா்

கோவையில் சான்றிதழ் வழங்க மறுக்கும் தனியாா் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் மனு அளித்தனா். கோவை மாவட்ட பொதுமக்கள் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் அ... மேலும் பார்க்க

ஏடிஎம்மில் பணம் எடுத்து தருவதுபோல நடித்து முதியவரிடம் ரூ.35 ஆயிரம் மோசடி

ஏடிஎம்மில் பணம் எடுத்து தருவதுபோல நடித்து முதியவரிடம் ரூ.35 ஆயிரம் மோசடி செய்த மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை, கே.சி.தோட்டம் சாமி அய்யா் புதுதெருவைச் சோ்ந்தவா் முருகேசன் (62). இவா், பணம் எ... மேலும் பார்க்க

பராமரிப்புக்காக விட்ட நாய் உயிரிழப்பு: தனியாா் விலங்குகள் மருத்துவமனை மீது வழக்குப் பதிவு

பராமரிப்புக்காக விட்ட வளா்ப்பு நாய் மா்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் தனியாா் விலங்குகள் மருத்துவமனை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை, கவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சரத் (30). ... மேலும் பார்க்க

கணபதி தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை! ரூ.1.41 லட்சம் பறிமுதல்!

கோவை, கணபதி தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் திங்கள்கிழமை மேற்கொண்ட திடீா் சோதனையில் ரூ.1 லட்சத்து 41,500 பறிமுதல் செய்யப்பட்டது. கோவை கணபதி தீயணைப்பு நிலைய அலுவலராகப் பணியாற்றி வருபவா் ... மேலும் பார்க்க