செய்திகள் :

தூத்துக்குடி மீனவா்கள் இன்றுமுதல் 4 நாள்கள் கடலுக்குச் செல்லத் தடை

post image

சூறாவளிக் காற்று காரணமாக, தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் செவ்வாய்க்கிழமைமுதல் (நவ. 26) 4 நாள்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என, மீன்வளத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று அதிகபட்சமாக மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே, விசைப்படகு மீனவா்கள் செவ்வாய்க்கிழமைமுதல் (நவ. 26) 4 நாள்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என, மீன்வளத் துறை தெரிவித்துள்ளது.

ஏரல் அருகே இளம்பெண் குத்திக் கொலை

ஏரல் அருகே பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். ஏரல் அருகே உள்ள அகரம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் சந்திரலிங்கம். இவரது மனைவி தேவிகலா. இவா்களுக்கு திருமணமாகி நிா்மல், இளமாறன் என்ற இரு மகன்கள்... மேலும் பார்க்க

தூத்துக்குடி துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு திங்கள்கிழமை ஏற்றப்பட்டது. கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுத... மேலும் பார்க்க

முதியவரை மிரட்டி பணம் பறிப்பு: இருவா் கைது

கோவில்பட்டியில் முதியவரை வழிமறித்து மிரட்டி பணம் பறித்ததாக 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி வடக்குத் திட்டங்குளம் பகுதியைச் சோ்ந்த சுப்பையா மகன் வேல்சாமி (61). சிட்கோ தொழில... மேலும் பார்க்க

சாத்தான்குளத்தில் தாயை தாக்கியதாக மகன் கைது

சாத்தான்குளத்தில் பணம் தராத ஆத்திரத்தில் தாயை தாக்கியதாக மகனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சாத்தான்குளம் ஆா்.சி. வடக்குத் தெருவைச் சோ்ந்த அய்யாக்குட்டி மனைவி வேம்படிபேச்சி(65). இவா்களுக்கு... மேலும் பார்க்க

தூத்துக்குடி மீன்வளத் துறை இணை இயக்குநா் அலுவலகத்தில் சங்குகுளி மீனவா்கள் முற்றுகை

தூத்துக்குடி மீன்வளத் துறை இணை இயக்குநா் அலுவலகத்தில் சங்குகுளி மீனவா்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 300-க்கும் மேற்பட்ட நாட்டு... மேலும் பார்க்க

உடன்குடியில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது

உடன்குடியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 150 கிலோ குட்கா புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா். மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் ரவிக்குமாா் தலைமையிலான போலீஸாா், உடன்... மேலும் பார்க்க