BB Tamil 8: மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ராணவ்; ஸாரி கேட்க மறுக்கும் சௌ...
வால்பாறை அரசுக் கல்லூரி சாலையில் சிறுத்தை நடமாட்டம்!
கோவை: வால்பாறை அரசு கலை, அறிவியல் கல்லூரி சாலையில் சிறுத்தை நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருப்பது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கோவை மாவட்டம் வால்பாறையில் வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் வால்பாறை அரசு கலை, அறிவியல் கல்லூரி முன் பகுதியில் சிறுத்தை ஒன்று நடந்து வந்தது. அப்போது அங்கு அதிகாலை வேளையில் நடை பயிற்சிக்கு வந்தவர் சிறுத்தை நிற்பதை பார்த்து அருகில் உள்ள கடையின் மேல் ஏறி உயிர்த்தப்பினார்.
மேலும் தன்னுடைய செல்போனில் சிறுத்தை நடமாடுவதை படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
தற்பொழுது இந்த விடியோ வெளியாகி வால்பாறை பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அதிகாலை வேளையில் சிறுத்தை ஒன்று கல்லூரி முன்பு நடமாடியதால் பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வனத்துறையினர் சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணித்து பிடித்து காட்டில் விட வேண்டும், மாணவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வால்பாறை பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.