குஜராத் பால விபத்து: புதிய பாலம் அமைக்க ரூ.212 கோடி ஒதுக்கீடு
வாழ்க்கைனா சந்தோஷமா இருக்கணும்... மாரீசன் டிரைலர்!
நடிகர்கள் வடிவேலு, ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவான மாரீசன் படத்தின் டிரைலர் வெளியானது.
ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் வடிவேலு, ஃபகத் ஃபாசில் இருவரும் மாரீசன் என்கிற படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்தை மலையாள இயக்குநர் சுதிஷ் சங்கர் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் வருகிற ஜூலை 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிக்க: நடிகரான அல்ஃபோன்ஸ் புத்திரன்!
டிரைலரில், ஃபஹத் ஃபாசில் திருட்டில் ஈடுபடுபவராகவும் வடிவேலு ஞாபக மறதி நோயுடன் போராடுவது போலவும் காட்டப்பட்டுள்ளது ரசிகர்களிடம் படத்தின் மீதான ஆவலை ஏற்படுத்தியுள்ளது.