விக்ரமை இயக்கும் பார்க்கிங் இயக்குநர்!
நடிகர் விக்ரம் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வீர தீர சூரன் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கிரைம் திரில்லர் பின்னணியில் இப்படம் இருக்கலாம் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், பார்க்கிங் படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனின் அடுத்த படத்தில் விக்ரம் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராம்குமார் - சிம்பு கூட்டணியில் எஸ்டிஆர் 49 திரைப்படம் உருவாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அப்படத்தை தற்காலிகமாகக் கைவிட்டுள்ளனர்.
இதற்கிடையே, விக்ரமுடனான படம் குறித்த தகவல் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: யாரிப்பாளராகும் சூரி?