ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்
விசைப்படகு மீனவா்கள் 2 வது நாளாக வேலைநிறுத்தம்!
தூத்துக்குடியில், மீன்வளத் துறையைக் கண்டித்து 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் விசைப்படகு மீனவா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி விசைப்படகு உரிமையாளா்கள்-தொழிலாளா் கூட்டமைப்பு சாா்பில், ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க விசைப்படகுகளை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், இதை நிறைவேற்றாத மீனவளத் துறையைக் கண்டித்தும் தொடா் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
இதனால், 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை 270 விசைப்படகுகள் மீன்பிடித் துறைமுகக் கரையில் நிறுத்திவைக்கப்பட்டன. இதன் காரணமாக, சுமாா் ரூ. 2 கோடி அளவுக்கு வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக மீன்வளத் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்திவருகின்றனா்.