செய்திகள் :

"விஜய்யுடன் கூட்டணியா... எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்; அதிமுக ஒன்றிணைய வேண்டும்" - ஓ.பி.எஸ்

post image

'அதிமுக'வில் ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கிடையேயான அதிகாரப்போட்டி முடிவுறாமல் தொடர்ந்து வருகிறது.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் 'அதிமுக' வை ஒன்றிணைப்போம் என வி.கே. சசிகலாவும், ஓ.பன்னீர் செல்வமும் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

சமீபத்தில் வி.கே.சசிகலா, "தமிழக மக்களின் நலன் காக்க, கழக ஆட்சி மீண்டும் அமைய அனைவரும் கரம் கோர்க்க வேண்டும். ஒன்றுபட்ட, வலிமைமிக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் ஒரே தீர்வு.

ஒன்றுபடுவோம்! வென்று காட்டுவோம்! வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒன்றுபட்ட அதிமுகவாக போட்டியிட்டால் வெற்றி நிச்சயம்" என்று அறிக்கை விட்டிருந்தார்.

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்

தற்போது இதுகுறித்துப் பேசியிருக்கும் ஓ.பன்னீர்செல்வம், "மாண்புமிகு சின்னம்மா வி.கே.சசிகலா அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று பேசியிருக்கிறார். அதை நான் வரவேற்கிறேன். பிரிந்திருக்கும் அதிமுக சக்திகள் ஒன்றுபட வேண்டும் என்பதுதான் என்னோட ஆசையும், அதைத்தான் தொடர்ந்து பேசிவருகிறேன். தேர்தல் நெருங்கும் சமயத்தில் அனைத்து தொகுதிகளுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொள்வேன்" என்று பேசியிருக்கிறார்.

தவெக தலைவர் விஜய் குறித்துப் பேசியவர், "விஜய் இப்போதுதான் அரசியல் இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார். களத்தில் இறங்கி செயல்படும்போதுதான் அவரது அரசியல் எதிர்காலத்தை கணிக்க முடியும். மக்களிடம் வரவேற்புக் கிடைத்து அவர் முதலில் தொகுதிகளில் வென்று காட்டவேண்டும். கூட்டணி என்பது அவரது அரசியல் செயல்பாட்டைப் பொறுத்துதான். எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்" என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

கழுகார்: கிளம்பிய இனிஷியல் தலைவர் டு 'ஐஸ்' வைக்கும் கனவுப் புள்ளி வரை!

கொதிக்கும் நலத்துறை அதிகாரிகள்!பாலுக்குக் காவலாக பூனையா?சமூகத்திற்கு நன்மை செய்ய உருவாக்கப்பட்ட துறையில், சமீபக்காலமாக மோசடி, ஊழல் புகார்கள் அதிகரித்து வருகிறதாம். அந்தத் துறையில், பணம் அதிகமாகப் புழங... மேலும் பார்க்க

Stalin: "இங்கு கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்யவே ஸ்டாலின் வெளிநாடு போயிருக்கிறார்" - இபிஎஸ் தாக்கு

"டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாகப் பெறுவதால் வருடத்துக்கு ரூ. 5400 கோடி என்று, இந்த நான்காண்டுகளில் ரூ. 22,000 கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள்" என்று குற்றம் சாட்டி பேசியுள்ளார் அ... மேலும் பார்க்க

ஆற்காடு: `உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் அடித்து விரட்டப்பட்டாரா முதியவர்? நடந்தது என்ன?

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சாத்தூர் கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், `உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நேற்று (3-9-2025) நடைபெற்றது.இந்த முகாமில், வெங்கடபதி என்கிற 6... மேலும் பார்க்க

PMK: ``உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் முதியவரை கொடூரமாக தாக்கியது மனிதத் தன்மையற்ற செயல்'' - அன்புமணி

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சாத்தூர் கிராம ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் நேற்று (3.9.2025) நடந்த `உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் முதியவர் ஒருவர் தாக்கப்பட்ட செய்தி வி... மேலும் பார்க்க

``ரஷ்யாவின் மீது நான் நடவடிக்கை எடுக்கவில்லையா?'' - நிருபரிடம் கொந்தளித்த ட்ரம்ப்

ரஷ்யா - உக்ரைன் போர் மூன்று ஆண்டுகள் கடந்தும் இன்னும் தொடர்ந்து வருகிறது.பிற நாடுகள், ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்வதை பெரும்பாலும் நிறுத்திவிட்டன. ஆனாலும், இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் ரஷ... மேலும் பார்க்க

டீம் சேர்க்கும் செங்கோட்டையன், நீக்கும் முடிவில் EPS? | Elangovan Explains

எடப்பாடிக்கு எதிராக டீம் சேர்க்கும் செங்கோட்டையன். அவரை நீக்கும் முடிவில் எடப்பாடி என்ன செய்கிறார்? செப் 5-ல், அதிமுகவில் பெரும் புயல் காத்திருக்கிறது என கூறப்படுகின்றது.மறுபுறம், அன்புமணியை நீக்கும் ... மேலும் பார்க்க