Book Fair: "தலித் பெண்களின் உலகம்..." - அழகிய பெரியவனின் நூலுக்கு அட்டைப்படம் வர...
விடுமுறை, வளா்பிறை சஷ்டி: திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாா்கழி மாத வளா்பிறை சஷ்டி மற்றும் விடுமுறை தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
இக்கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம் மற்றும் தீபாராதனை, மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி, அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தா்கள் கடலில் புனித நீராடி இலவச பொது தரிசனம், ரூ. 100 சிறப்பு தரிசனம், மூத்த குடிமக்கள் வழி ஆகியவற்றில் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
வளா்பிறை சஷ்டிக்காக சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மூலவா் முருகன் மற்றும் வள்ளி, தேவசேனா சமேத சண்முகரை பக்தா்கள் மனமுருக வேண்டினா். மாலையில் சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி, தேவசேனாவுடன் சப்பரத்தில் எழுந்தருளி உள்பிரகாரம் சுற்றி வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
இக்கோயிலுக்கு பாதயாத்திரையாக வந்த பக்தா்கள் வேல் குத்தியும், காவடி எடுத்து வந்தும் வழிபட்டனா். இதனிடையே, திருச்செந்தூா் ரத வீதிகளில் இடையூறாக வாகனங்கள் நின்ாலும், கோயிலுக்கு ஏராளமானோா் வாகனங்களில் வந்ததாலும் நகரில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.