செய்திகள் :

விண்ணப்பித்துவிட்டீர்களா..?தேசிய சுகாதாரத் திட்டத்தில் வேலை!

post image

நாமக்கல் மாவட்டத்தில் தேசிய சுகாதாரத் திட்டத்தின்கீழ் பல்வேறு திட்டங்களில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுபற்றிய விபரம் வருமாறு:

பணி: ஆடியோலஜிஸ்ட் மற்றும் பேச்சு சிகிச்சையாளர்

காலியிடம் : 1

சம்பளம் : மாதம் ரூ.23,000

தகுதி: பேச்சு மற்றும் மொழி நோயியல் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு : 40-க்குள் இருக்க வேண்டும்.

பணி: சிகிச்சை உதவியாளர் (பெண்)

சம்பளம் : மாதம் ரூ.13,000

தகுதி: தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் டிப்ளமோ நர்சிங் தெரபிஸ்ட் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 59-க்குள் இருக்க வேண்டும்.

பணி: இடைநிலை சுகாதாரப் பணியாளர்

காலியிடங்கள் : 23

சம்பளம்: மாதம் ரூ.18,000

தகுதி: செவிலியர் பட்டய படிப்பு அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 50-க்குள் இருக்கவேண்டும்.

பணி: பல்நோக்கு சுகாதாரப் பணியாளர், சுகாதார ஆய்வாளர்

காலியிடங்கள்: 12

சம்பளம் : மாதம் ரூ.14,000

தகுதி: அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சியுடன் பொதுசுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு : 40 - க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.namakkal.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் சுயசான்றொப்பம் செய்யப்பட்ட தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து நேரிலோ அல்லது விரைவுத் தபால் மூலமாகவோ கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

மாவட்ட சுகாதார அலுவலர், நிர்வாக செயலாளர், மாவட்ட நல வாழ்வு சங்கம் (District Health Society), மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாமக்கல் மாவட்டம் - 637 003. தொலைபேசி எண்: 04286281424.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 4.7.2025 அன்று மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

சென்னை மாநகராட்சியில் விலங்கு நல ஆர்வலர் பணி

Applications are invited from eligible candidates for the following vacant posts in various schemes under the National Health Scheme.

சென்னை மாநகராட்சியில் விலங்கு நல ஆர்வலர் பணி

பெருநகர சென்னை மாநகராட்சியின்கீழ் செயல்படும் நாய் இனக்கட்டுப்பாட்டு மையத்தில் மாதந்திர தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ள விலங்கு நல ஆர்வலர் பணிக்கு விலங்கு நல ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள்... மேலும் பார்க்க

தனலட்சுமி வங்கியில் அலுவலர், மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கேரளம் மாநிலம் திருச்சூரை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் 97 ஆண்டுகால வங்கி பாரம்பரியம் கொண்ட வணிக வங்கியான தனலட்சுமி வங்கியில் காலியாக உள்ள இளநிலை அலுவலர்கள் மற்றும் மேலாளர்கள் பணியிடங்களுக்கா... மேலும் பார்க்க

மாதம் ரூ. 85 ஆயிரம் சம்பளத்தில் வங்கியில் வேலை வேண்டுமா..?

தேசிய விவசாய மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின்(நபார்டு) லக்னௌ கிளையில் காலியாக உள்ள கூட்டுறவு மேம்பாட்டு அலுவலர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்... மேலும் பார்க்க

தனியாா் நிறுவனப் பணிகளில் இடஒதுக்கீடு -மத்திய அமைச்சா் வலியுறுத்தல்

தனியாா் நிறுவனப் பணிகளில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய சமூகநீதி, அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே வலியுறுத்தியுள்ளாா். மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த தலித் தலைவரான அதாவலே, ... மேலும் பார்க்க

மத்திய அரசில் 3, 131 காலிப் பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஜூலை 18 வரை அவகாசம்

மத்திய அரசில் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள ‘சி’ பிரிவில் 3,131காலிப்பணியிடங்களுக்கான தோ்வுக்கு வரும் ஜூலை 18 வரை விண்ணப்பிக்கலாம் என்று மத்திய பணியாளா் தோ்வாணையம் (எஸ். எஸ்.சி.) தெரிவித்துள்ளது. இது ... மேலும் பார்க்க

எஸ்பிஐ வங்கியில் புரொபஷனரி அலுவலர் வேலை: காலியிடங்கள் 541

பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில்(பாரத ஸ்டேட் வங்கி) நிரப்பப்பட உள்ள 541 புரொபஷனரி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுத... மேலும் பார்க்க