செய்திகள் :

விண்ணப்பித்துவிட்டீர்களா..? 13,217 வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி!

post image

வங்கி வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள பட்டதாரி இளைஞர்கள் பயன்பெறும் வகையில், அரசுடமையமாக்கப்பட்ட வங்கிகளில் 2025 - 2026 ஆம் ஆண்டிற்கான 13,217 வங்கி அலுவலர், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான பொது எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வு நிறுவனமான (ஐபிபிஎஸ்) வெளியிட்டுள்ளது. இதற்கு வங்கி பணியே நோக்கமாக கொண்டு படித்து வரும் தகுதியான இருபாலர்களிடமிருந்து நாளைக்குள்(செப்.21) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி உட்பட அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கு (பாரத ஸ்டேட் வங்கி தவிர) தேவைப்படும் பணியாளர்களும், அதிகாரிகளும் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்சன் (ஐபிபிஎஸ்) நிறுவனம் நடத்தும் போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி மட்டும் பணியாளர்களை தேர்வு செய்ய தனியாக தேர்வு நடத்துகிறது.

ஒவ்வொரு பொதுத்துறை வங்கிகளும் தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களை ஐபிபிஎஸ் தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் தேர்வு செய்கின்றன.

மொத்த காலியிடங்கள்: 13,217

பணி மற்றும் காலியிடங்கள்:

பணி: Office Assistants (Multipurpose) - 7,972

பணி: Officer Scale I – 3,907

பணி: Officer Scale II (General Banking Officer) – 854

பணி: Officer Scale II (IT) – 87

பணி: Officer Scale II (CA) – 69

பணி: Officer Scale II (Law) – 48

பணி: Officer Scale II (Treasury Manager) – 16

பணி: Officer Scale II (Marketing Officer (MO)) – 15

பணி: Officer Scale II (Agriculture Officer) – 50

பணி: 10. Officer Scale-III (Senior Manager) – 199

தமிழ்நாடு கிராம வங்கி காலியிட விவரங்கள்:

பணி: Office Assistants (Multipurpose) – 468

பணி: Officer Scale I – 200

பணி: Officer Scale II (IT) – 12

பணி: Officer Scale II (CA) – 2

பணி: Officer Scale II (Marketing Officer (MO)) – 4

பணி: Officer Scale II (Agriculture Officer) – 2

தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பவர்கள், சிஏ, வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், கால்நடை பராமரிப்பு, கால்நடை அறிவியல், வேளாண் பொறியியல், மீன் வளர்ப்பு, வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், மேலாண்மை, சட்டம், பொருளாதாரம் அல்லது கணக்கியல் பிரிவில் பட்டயம், பட்டம் பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழிகளில் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 21.9.2025 தேதியின்படி 18 முதல் 28, 30, 32, 40 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதி முறைப்படி ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி ஆண்டுகளும், விதவைகள், மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலமும், முதல்நிலை எழுத்துத் தேர்வு, முதன்மைத் தேர்வு மூலமும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

வங்கி வாரியாக காலியிடங்கள், தேர்வு பாடத்திட்டம், நேரம் மற்றும் மதிப்பெண்கள் விபரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் முதல்நிலைத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் மற்றும் புதுச்சேரி.

முதன்மைத் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, மதுரை, திருநெல்வேலி, கோவை மற்றும் திருநெல்வேலி

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.850. இதர பிரிவினர்களுக்கு ரூ.175.

விண்ணப்பிக்கும் முறை: www.ibps.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 21.9.2025

முதல்நிலை எழுத்துத்தேர்வு நடைபெறும் மாதம்: நவம்பர் -2025

முதன்மைத் தேர்வு நடைபெறும் மாதம்: டிசம்பர் - 2025, ஜனவரி - 2026

தேர்வு முடிவுகள் உத்தேசமாக வெளியிடப்படும் மாதம்: ஜனவரி - 2026

நேர்முகத்தேர்வு நடைபெறும் மாதம்: ஜனவரி, பிப்ரவரி - 2026

மேலும் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

போக்குவரத்து கழகத்தில் தொழிற்பழகுநா் பயிற்சி: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தொழிற்பழகுநா் பயிற்சி பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் மண்டல மேலாண் இயக்குநா்கள் வெளியிட்டுள்ள செய்திக் க... மேலும் பார்க்க

தகவல் தொழில்நுட்ப உதவியாளா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

நாகை மாவட்ட சமூகநலத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப உதவியாளா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நாகை மாவட்டத்தில் சமூக நலத்துறை மூலம் செயல்பட்டு வரும் மிஷன் சக்தி திட்டம் - மாவ... மேலும் பார்க்க

திருச்சி ஐஐஎம்- இல் ஆசிரியரல்லாத பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

திருச்சியில் உள்ள இந்தியன் மேலாண்மை நிறுவனத்தில் (ஐஐஎம்) காலியாகவுள்ள ஆசிரியரல்லாத பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் வ... மேலும் பார்க்க

மிஸ்பண்ணிடாதீங்க... இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை!

மத்திய அரசு நிறுவனமான இந்திய விமான நிலைய ஆணையத்தில்(ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா) நிரப்பப்பட உள்ள 976 இளநிலை அலுவலர் பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முட... மேலும் பார்க்க

எல்ஐசி வீட்டுவசதி நிதி நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சி!

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி வீட்டுவசதி நிதி நிறுவனத்தில் பட்டதாரி இளைஞர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்ப... மேலும் பார்க்க

தமிழக அரசு மருத்துவமனைகளில் உதவி மருத்துவ அலுவலர் பணி

தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 27 உதவி மருத்துவ அலுவலர்(சித்தா) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவ ஆட் சேர்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இரு... மேலும் பார்க்க