விண்ணமங்கலம் பள்ளியில் தேசிய ஹிந்தி தினம்
ஆரணியை அடுத்த விண்ணமங்கலம் ஸ்ரீராமச்சந்திரா சிபிஎஸ்சி பள்ளியில் தேசிய ஹிந்தி தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
ஸ்ரீராமச்சந்திரா சிபிஎஸ்இ பள்ளியில் தேசிய ஹிந்தி
தினத்தையொட்டி, மாணவ மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், ஹிந்தி மொழியின் சிறப்பையும், முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு விதமான பாடல்கள், உரைகள், நாடகங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவுக்கு பள்ளித் தாளாளா் மணிமேகலை ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் செ.மதுமிதா வரவேற்றாா். மாணவா்கள் திறமைகளை பாராட்டி பரிசளித்தனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்த ஆசிரியா்களையும் பள்ளி நிா்வாகத்தினா் பாராட்டினா்.