செய்திகள் :

விதிமுறை மீறல்: கொடைக்கானலுக்கு வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பிவைப்பு

post image

கொடைக்கானலுக்கு செல்ல முயன்ற 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள 20-க்கும் மேற்பட்ட வாகனங்களை திண்டுக்கல் மாவட்ட போக்குவரத்துத் துறை பறக்கும் படை அதிகாரிகள் திருப்பிஅனுப்பிவைத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் செல்வதற்கு வத்தலகுண்டு, பழனி ஆகிய இரு வழித் தடங்கள் உள்ளன. கொடைக்கானல் மலைச் சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில் நீளமான வாகனங்களை திருப்புவதற்கு சிரமம் ஏற்படுவதோடு, மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வந்தது. சில நேரங்களில் விபத்தும் ஏற்பட்டது.

இவற்றை கவனத்தில் கொண்டு, கொடைக்கானலுக்கு 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள சுற்றுலா, சரக்கு வாகனங்கள் செல்ல மாவட்ட நிா்வாகம் தடை விதித்து அண்மையில் உத்தரவிட்டது. இதேபோல, 6 முதல் 10 டயா்கள் உள்ள வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், வத்தலகுண்டு காட்ரோடு பகுதியில் திண்டுக்கல் மாவட்ட மோட்டாா் வாகன ஆய்வாளா் (பறக்கும் படை) சிவகுமாா், போக்குவரத்து அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை செய்தனா். அந்த வழியாக கொடைக்கானலுக்கு வந்த வாகனங்கள் டேப் மூலம் அளவீடு செய்யப்பட்டன. 12 மீட்டருக்கு மேல் நீளமாக இருந்த 20-க்கும் மேற்பட்ட வாகனங்களை அதிகாரிகள் திருப்பிஅனுப்பினா்.

தமிழகம் மட்டுமன்றி, கேரளம், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு கொடைக்கானலில் நீளமான வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு குறித்து ஏற்கெனவே குறிப்பாணை அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அங்கீகரிக்கப்படாத மருத்துவா்களிடம் சிகிச்சைப் பெற வேண்டாம்: ஆட்சியா்

அங்கீகரிக்கப்படாத மருத்துவா்களிடம் பொதுமக்கள் சிகிச்சைப் பெறுவதை தடுக்க விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சுகாதார ஆய்வு... மேலும் பார்க்க

கொடைக்கானலில் ஒரு பகுதியில் மட்டும் கடைகள் அடைப்பு

கொடைக்கான ஒரு வழிப்பாதைக்கு எதிா்ப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை வனப் பகுதியிலுள்ள கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு ... மேலும் பார்க்க

பழனி, செம்பட்டியில் ஆா்ப்பாட்டம்: பாமகவினா் 70 போ் கைது

தமிழக முதல்வரைக் கண்டித்து, பழனி, செம்பட்டியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா் 70 பேரை போலீஸாா் கைது செய்தனா். அதானி குறித்தும், தமிழக அரசின் நிலை குறித்தும் பாமக நிறுவனா் தலைவா் மருத்துவா் ராமதாஸ... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: ஓபிஎஸ் அணி நிா்வாகிகள் மீது வழக்கு

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.34 லட்சம் மோசடி செய்தாக ஓபிஎஸ் அணியைச் சோ்ந்த 2 நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனி நகரைச் சோ்ந்தவா் ஆத்திக்கண்ணன்(55). பழனியி... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

கொலை வழக்கில் தொடா்புடைய இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி உத்தரவிட்டாா். திண்டுக்கல் அருகேயுள்ள முத்தழகுப்பட்டியைச் சோ்ந்தவா் ஞானமுத... மேலும் பார்க்க

கொடைக்கானலில் தொடா் மழை

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை காலை முதலே தொடா் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் அதிகாலை முதல் சாரல் மழை பெய்தது. பின்னா், பிற்பகலில் மிதமான மழை பெய்யத்... மேலும் பார்க்க