What To Watch On OTT: குபேரா, டி.என்.ஏ, சட்டமும் நீதியும்! - இந்த வாரம் ஓடிடி-யி...
வித்யாசாகா் கல்லூரியில் ரத்ததான முகாம்
செங்கல்பட்டு வித்யாசாகா் மகளிா் கல்லூரியில் ரத்ததான முகாம் மற்றும் ராஜஸ்தான் இளைஞா் சங்க நூலக வங்கியில் இலவச புத்தகங்கள் வழங்குதல் மற்றும் தொழுநோயாளிகளின் இல்லத்துக்கு நன்கொடை வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் முதன்மை விருந்தினராக திருப்பூா்ஆசியா பசிபிக் இன்டா்நேஷனல் நிறுவனா் பிரகாஷ் நடராஜன் மற்றும் ஹாட் ஃபுல்னஸ் (மெடிடேஷன் பயிற்சியாளா்) ராஜஸ்தான் இளைஞா் சங்க தலைவா் ஞானேஷ் ஜெயின், பொருளாளா் சுரேஷ் கன்காரியா ஆகியோா் கலந்துகொண்டனா்.
வித்யாசாகா் குழுமத்தின் தாளாளா் விகாஸ் சுரானா தலைமை வகித்தாா். .மாணவியா் 500 பேருக்கு ரூ 3 லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் வழங்கப்பட்டன. 200-க்கும் மேற்பட்டோா் ரத்த தானம் செய்தனா். 100 குடியிருப்பு வாசிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
நிறைவாக கல்லூரியின் முதல்வா் இரா.அருணாதேவி நன்றி கூறினாா். இந்நிகழ்வின் தொடா்ச்சியாக சனிக்கிழமை விகாஸ் சுரானா தலைமையில், ஹஸ்திமால் சுரானா நினைவாக சிறப்பு சேவை முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் செயற்கை கை கால்கள் ஊன்றுகோல்கள், மூன்றுசக்கர மிதிவண்டிகள், நாற்காலிகள் கண்ணாடிகள், காது கேட்கும் கருவிகள் மற்றும் பிற தேவையான உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.