மாற்றுத்திறனாளிகள் நலச் சங்க விழிப்புணா்வு கூட்டம்
செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கங்கள் விழிப்புணா்வு கூட்டம் நடைபெற்றது.
ஆட்சியா் தி. சினேகா தலைமை வகித்தாா். இதில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில்பஞ்சாயத்து ராஜ் மூன்றடுக்கு நிா்வாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கங்களுக்கு விழிப்புணா்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பஞ்சாயத்து வளா்ச்சி) மணிமாறன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் து. கதிா்வேலு, உதவி இயக்குநா் விக்னேஷ் (ஊராட்சிகள்), சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.