உயா்நிலைப் பால கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்க உயா்நீதிமன்றம் உத்தரவு!
கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் மதுராந்தகம், தாம்பரம், செங்கல்பட்டில் நடைபெறவுள்ளது.
வரும் 21.07.2025 பிற்பகல் 2.30 மணியளவில் மதுராந்தகம் கோட்டாட்சியா் தலைமையிலும், 22.07.2025 காலை 10.30 மணியளவில் தாம்பரம் கோட்டாட்சியா் தலைமையிலும், 24.07.2025 காலை 10.30 மணிக்கு செங்கல்பட்டு சாா்-ஆட்சியா் தலைமையிலும் கூட்டங்கள் நடைபெறும்.
இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளைக் கூறி உரிய விவரங்கள் மற்றும் பதில்களை பெற்று பயன்பெறலாம் என ஆட்சியா் தி. சினேகா தெரிவித்துள்ளாா்.