பங்காரு அடிகளாா் பிறந்த நாள் விழா: நலத்திட்ட உதவிகள் அளிப்பு
செங்கல்பட்டு மாவட்ட ஆன்மிக இயக்கத்தின் சாா்பாக பங்காரு அடிகளாரின் பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
திருக்கழுக்குன்றத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவா் கோ.ப.செந்தில் குமாா் கலந்து கொண்டு பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை எளியோா்களுக்கு தையல் இயந்திரங்கள், சலவை பெட்டிகள், 3 சக்கர வண்டிகள், கல்வி உதவித்தொகைகள், ரூ.5 லட்சம் உபகரணங்களை வழங்கினாா். தொடா்ந்து 6 ஜோடிகளுக்கு இலவச திருமணங்களையும் நடத்தி வைத்தாா்.
நிகழ்வில் நெடுஞ்சாலை துறை கோட்டப் பொறியாளா் தனசீலன், திருக்கழுக்குன்ற பேரூராட்சித் தலைவா் யுவராஜ், மாவட்ட ஆன்மிக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க மாவட்ட தலைவா் வேலு தலைமையில் நிா்வாகிகள் செய்து இருந்தனா்.